மெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான் அறிமுகம் – 2017 சாங்காய் ஆட்டோ ஷோ

0

சீனாவில் நடைபெறுகின்ற 2017 சாங்காய் ஆட்டோ ஷோவில் மெர்சிடிஸ் பென்ஸ் கான்செப்ட் ஏ செடான் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கால் காம்பேக்ட் ரக சொகுசு மாடலாக கான்செப்ட் ஏ செடான் விளங்கும்.

Mercedes Benz Concept A Sedan

மெர்சிடிஸ் கான்செப்ட் ஏ செடான்

  • காம்பேக்ட் ரக செடான் பிரிவில் நவீன வடிவ தாத்பரியங்களை பெற்றதாக விளங்கும்.
  • அடுத்த தலைமுறை மெர்சிடிஸ்  MFA2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.
  • புதிய டிசைன் சாகப்தத்தை கொண்டதாக விளங்கும் என மெர்சிடிஸ் தெரிவிக்கின்றது.

Mercedes-Benz Concept A Sedan, 2017

நவீன தலைமுறைக்கு ஏற்ற வகையிலான டிசைன் தாத்பரியங்களை பெற்றதாக வரவுள்ள கான்செப்ட் ஏ செடான் காரில் மிக நேர்த்தியான முன்புற அமைப்பில் ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய ஏஎம்ஜி கார்களில் இடம்பெற்றுள்ள கிரில் அமைப்புடன் வந்துள்ளது. இந்த காரின் நீளம் 4,570, அகலம் 1,870மிமீ மற்றும் உயரம் 1,462மிமீ ஆகும்.

இன்டிரியர் அம்சத்திலும் மிக நேர்த்தியான இருக்கை அமைப்புடன் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மிகவும் சொகுசான இருக்கைகளை கொண்டதாக வரவுள்ளது.

எதிர்கால காம்பேக்ட் ரக மாடல்களாக மெர்சிடிஸ் நிறுவனத்தின்  MFA2 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட உள்ள கார்களான B-class, CLA, CLA சூட்டிங் பிரேக் மற்றும் GLA போன்ற கார்களுடன் எதிர்பார்க்கப்படுகின்ற மற்றொரு எஸ்யூவி மாடலான GLB ஆகிய கார்களின் வரிசையில் ஏ கிளாஸ் செடான் மாடலும் இடம்பெற உள்ளது.

mercedes benz a concept side view

mercedes benz a concept rear

2018 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த புதிய மெர்சிடிஸ் ஏ கிளாஸ் கான்செப்ட் மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் கான்செப்ட் ஏ படங்கள்