Automobile Tamilan

ரேஞ்ச் ரோவர் வேலர் எஸ்யூவி படம் வெளியீடு – 2017 ஜெனிவா மோட்டார் ஷோ

2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரேஞ்ச் ரோவர் வேலர் எஸ்யூவி காரின் படத்தை முதன்முறையாக லேண்ட் ரோவர்  வெளியிட்டுள்ளது. எவோக் மற்றும் எவோக் ஸ்போர்ட் மாடலுக்கு இடையில் வேல்ர் எஸ்யூவி (Velar) நிலைநிறுத்தப்பட உள்ளது.

ரேஞ்ச் ரோவர் வேலர் எஸ்யூவி

விற்பனையில் உள்ள ரோஞ்ச் ரோவர் கார்களின் அடிப்படையான வடிவதாத்பரியங்களை பெற்ற மாடலாகவே காட்சியளிக்கின்ற இந்த புதிய எஸ்யூவி மாடலில் மிக சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை வழங்கவல்ல அம்சங்களை பெற்றதாக விளங்கும் என குறிப்படப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு கூடுதல் புராஃபைல் கோடுகளை பெற்றதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள படத்தில் மிக நேர்த்தியான சன்ரூஃப் அமைந்துள்ளது. இன்டிரியர் அமைப்பின் படங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் வெளியாகியுள்ள படத்தின் வாயிலாக மிக 12 அங்குல இன்ஃபோடெயின்ட்மென்ட் தொடுதிரை சிஸ்டத்தில் லேண்ட் ரோவர் இன்டச் கன்ட்ரோல் புரோ சிஸ்டம் அமைந்திருக்கும் , 12 அங்குல இன்ஸ்டூர்மென்ட் டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவை கொண்டிருக்கலாம்.

வேலர் எஸ்யூவி பெயர் குறிப்பு

1969 ஆம் ஆண்டு முதல் ரோஞ்ச்ரோவர் காரின் முதல் புரோட்டோடைப் மாடலுக்கு வைக்கப்பட்ட குறியீடு பெயரே வேல்ர் ஆகும். வேல்ரிஸ் என்ற பெயரில் பல்வேறு புரோட்டைப் மாடல்களும் உருவாக்கப்பட்டது. அதனை போற்றும் வகையிலே வேல்ர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வருகின்ற 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக ரேஞ்ச் ரோவர் வேல்ர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தாண்டின் இறுதியிலே  விற்பனைக்கு வரவுள்ள வேல்ர் இந்தியாவில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி பரினாம வளர்ச்சி பட விபரம்

Exit mobile version