டொயோட்டா i-TRIL தானியங்கி கார் டீஸர் – ஜெனிவா மோட்டார் ஷோ 2017

0

வருகின்ற மார்ச் மாதம் தொடங்க உள்ள 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தும் நோக்கில் டொயோட்டா i-TRIL தானியங்கி கார் டீஸர் படத்தை டொயோட்டா வெளியிட்டுள்ளது.  i-TRIL கான்செபட் எதிர்கால ஆட்டோமொபைல் சார்ந்த தேவைக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

டொயோட்டா i-TRIL

வருகின்ற மார்ச் 9ந் தேதி தொடங்க உள்ள 87 ஆம் ஆண்டு 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை மாடல்களும் காட்சிக்கு வரவுள்ளது. சமீபத்தில் டொயோட்டா வெளியிட்டுள்ள ஐ -டிரில் டீசர் பற்றி பார்க்கலாம்.

நகர பயன்பாட்டுக்கு ஏற்ற சிறிய கார் , எலக்ட்ரிக் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவற்றுக்கு மாற்றாக குறைந்த வேகத்தின் சிறப்பான அனுபவத்தினை வழங்கும் மாடலாக i-TRIL விளங்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

அனேகமாக இந்த கான்செப்ட் மாடல் மூன்று சக்கரங்களை கொண்ட 3 இருக்கை அமைப்புடன் சிறப்பான வசதிகளுடன் நகரங்களுக்குள் பயணிக்கும் வகையிலான தானியங்கி கார் மாடலாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

டொயோட்டாவின் ஐரோப்பா டிசைன் ஸ்டூடியோவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கான்செப்ட் மாடல் குறித்தான முழுமையான தகவல்கள் ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் வெளிவரும் இனைந்திருங்கள்….