Automobile Tamil

ஃப்ளோ மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம் – ட்வென்டி டூ மோட்டார்ஸ்

ட்வென்டி டூ மோட்டார்ஸ் ஸ்டார்-அப் நிறுவனம் புதிதாக ஃப்ளோ என்ற பெயரில் மின்சார ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல் ஒன்றை சிங்கிள் சார்ஜில் 80 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

ட்வென்டி டூ மோட்டார்ஸ்

 

வருகின்ற பிப்ரவரி 2018- யில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள 22 மோட்டார்ஸ் ஃப்ளோ ஸ்கூட்டர் ரூ.65,000 முதல் ரூ.70,000 விலைக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்பத்தி நிலை மாடலுக்கு இணையாக காட்சியளிக்கின்ற கான்செப்ட் மாடல் வட்ட வடிவ எல்இடி ரிங் பெற்ற ஹெட்லைட் கொண்டாதாக கோண வடிவிலான கூர்மையான எட்ஜை கொண்ட அப்ரான் பெற்றுள்ளது.

மிகவும் ஸ்டைலிசான அம்சத்தை பெற்ற டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக் ஆகியவற்றை கொண்டிருக்கின்ற ஃப்ளோ ஸ்கூட்டரின் டாப் வேரியன்டில் இரட்டை பேட்டரி கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2,100 வாட்ஸ் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு 85 கிலோ எடை பெற்ற இந்த ஸ்கூட்டர் 150 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கும். முழுமையான சார்ஜ் ஏறுவதுற்கு 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் ஃப்ளோ மாடல் அதிகபட்சமாக 80 கிமீ தொலைவு வரை பயணிக்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக ரூபாய் 5 மில்லியன் முதலீடு செய்ய உள்ள 22 மோட்டார்ஸ் ஆண்டுக்கு 10,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள  ட்வென்டி டூ மோட்டார்ஸ் ஃப்ளோ ஸ்கூட்டர் விலை ரூ.70,000 என தொடங்கலாம்.

Exit mobile version