யமஹா க்ராஸ் ஹப் கான்செப்ட் அறிமுகம் – டோக்கியா மோட்டார் ஷோ 2017

0

Yamaha Cross Hubடோக்கியா மோட்டார் ஷோ 2017 அரங்கில் யமஹா நிறுவனம் மீண்டும் ஒருமுறை கார் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற யமஹா க்ராஸ் ஹப் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

யமஹா க்ராஸ் ஹப்

yamaha cross hub concept tokyo

Google News

இருசக்கர வாகனம், இசைக்கருவிகள் என பல்வேறு துறைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யமஹா 2013 ஆம் ஆண்டில் மோட்டிவ் கான்செப்ட், அதனை தொடர்ந்து ஸ்போர்ட்டிவ் வடிவமைப்பை பெற்ற மாடலை 2015 ஆம் ஆண்டில் ஸ்போர்ட் ரைட் கான்செப்ட் என்ற மாடலை வெளியிட்டிருந்தது.

தற்போது டோக்கியாவில் நடைபெற்று வரும் 2017 மோட்டார் கண்காட்சியில் மெக்லாரன் எஃப் 1 கார்டன் முரே அவரின் வடிவமைப்பில் உருவாகாத முதல் கான்செப்ட் கார் மாடலை யமஹா அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. பிக்-அப் எஸ்யூவி போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கான்செப்ட் காரில் இடம்பெற உள்ள எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

yamaha cross hub concept

தொடர்ந்து கார் சந்தை மீதான ஆர்வத்தை மூன்று விதமான கான்செப்ட் வாயிலாக வெளிப்படுத்தி வரும் யமஹா நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் கார் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

yamaha cross hub concept front yamaha cross hub concept view yamaha cross hub concept interior yamaha cross hub concept side yamaha cross hub concept rear