இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடும் யமஹா – டோக்கியா மோட்டார ஷோ

0

yamaha e01

46வது டோக்கியா மோட்டார் ஷோவில் அறிமுகம் செயப்பட உள்ள யமஹா நிறுவனம், E01, E02, லேண்ட் லிங்க் கான்செப்ட் உட்பட YPJ-YZ இ-சைக்கிள் போன்ற மாடல்களை சர்வதேச அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுதவிர ஜப்பான் சந்தை மாடல்களாக டெனியர் 700, ஆர்1 போன்ற மாடல்களையும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Google News

E01 எனப்படும் கான்செப்ட் இந்நிறுவனத்தின் பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். இந்த மாடல் 125 சிசி ஸ்கூட்டருக்கு இணையாக அமைந்திருக்கும். யமஹாவின் விளக்கத்தின்படி, E01 வேகமான சார்ஜருக்கு இணக்கமாக அதிகபட்ச வரம்பு, பல்வேறு மாறுபாடான வரம்புகளை பெற்றதாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E01 ஸ்கூட்டரின் வடிவமைப்பு தாத்பரியங்கள் எதிர்கால மாடல்களை ஊக்குவிக்கும் என்றும் யமஹா குறிப்பிட்டுள்ளது.

அடுத்து 50சிசிக்கு இணையான திறனை கொண்டதாக வரவுள்ள குறைந்த வரம்பு பெற்ற மாடலாக யமஹா E02 விளங்க உள்ளது. E02  உன்னதமான வடிவதைப்புடன், இலகுரக சேஸ் மற்றும் நீக்கக்கூடிய வகையிலான பேட்டரி ஆகியவற்றை பெற்றிருக்கும்.

yamaha e01

லேண்ட் லிங்க் கான்செப்ட்

தானியங்கி முறையிலான லேண்ட் லிங்க் கான்செப்ட் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த தன்னாட்சி வாகன தீர்வு அதன் சுற்றுப்புறங்களை உணர்ந்து வெளிப்புற நிலப்பரப்பு அறிந்து அதற்கு ஏற்ப இயங்கும். இதில் வழங்கப்பட உள்ள AI சார்ந்த நுட்பம் மூலம் பாதையை அறிந்து அதன் மூலம் தானாகவே செல்லும். வாகனத்தின் பாதையில் கண்டறியப்பட்ட தடைகளை தானாக தவிர்க்கிறது. மேலும், நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இயக்கலாம். மேலும் இந்த கான்செப்டின் சிறப்பு ஒவ்வொரு திசையிலும் நகரும் திறனை பெற்றிருக்கும்.

 yamaha-land-link-concept