உங்கள் பைக் குறைவான மைலேஜ் தர முக்கிய காரணங்கள் என்ன ? அதற்கு உண்டான தீர்வுகள் என்ன என்பதனை பைக் மைலேஜ் தகவல் தெரிந்தகொள்ளலாம்.

பைக் மைலேஜ்

பைக் மைலேஜ்

மைலேஜ் மிகவும் அவசியமான ஒன்று அவற்றை சாதாரணமாக எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் கார் ஓட்டுநர்களும் ஒதுக்கிவிட முடியாது அல்லவா ?

1.என்ஜின் ஆயில்

முறையான கால இடைவெளியில் தயாரிப்பாளரின் பரிந்துரையின் படி இஞ்ஜின் ஆயில் மாற்றாமல் இருப்பது மைலேஜ் குறைய மிக முக்கிய காரணம் ஆகும். அதேபோல தரமற்ற என்ஜின் ஆயில் அல்லது தயாரிப்பாளர் பரிந்துரைக்காத ஆயிலை பயன்படுத்தினாலும் குறையும்.

தயாரிப்பாளர் கொடுத்துள்ள கையேடில்  ஆயில் மாற்றும் விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட கிமீ வாகனம் ஓடவில்லை என்றாலும் என்ஜின் ஆயிலை குறிப்பிட்ட காலத்தில் மாற்றுவது மிக அவசியம். ஆயில் தன்மை காலம் கடந்துவிட்டால் தானாகவே மாறிவிடும் இயல்பினை கொண்டதாகும்.

என்ஜின் குளிர்ச்சியாக இருக்கும் தருணத்தில் ஆயில் டேங் மூடியை திறந்து ஆயிலின் நிறத்தினை தெரிந்துகொள்ளலாம். கருமை நிறத்தினை ஆயில் எட்டியிருந்தால் நிச்சியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

பைக் மைலேஜ்

 

2. டயர்

டயரில் முறையான காற்று அழுத்ததை முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பது மைலேஜ் குறைய முக்கிய காரணமாகும்.  அவ்வாறு முறையான காற்றுழுத்தம் இல்லை என்றால் பைக் செல்லும் பொழுது டயர்கள் சரியான இயக்கத்தினை வெளிப்படுத்தாமல் சிரமப்படுவதனால் மைலேஜ் குறையும். அதிகமான காற்று இருப்பதும் மிகவும் தவறான ஒன்றாகும்.

பைக் மைலேஜ்

3. மித வேகம்

பைக்கில் மணிக்கு 60 கிமீ வேகத்திற்கு மேல் பயன்படுத்துவனை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். சுமார் மணிக்கு 40 கிமீ வேகத்திலிருந்து 60 கிமீ வேகத்திற்குள் பயன்படுத்தினால் சிறப்பான மைலேஜ் பெறலாம்.

பைக் மைலேஜ்

4. கார்புரேட்டர்

என்ஜினுக்கு தேவையான காற்று மற்றும் எரிபொருளை கொண்டு செல்லும் கார்புரேட்டரை சரியாக வைத்து கொள்ளுவது அவசியம். இதில் உள்ள காற்று மற்றும் எரிபொருள் செல்வதற்கான ஸ்க்ரூ மற்றும் என்ஜின் ஐடில் ஆர்பிஎம் ஸ்க்ரூ, இவற்றில் காற்று மற்றும் எரிபொருளுக்கான ஸ்க்ரூவினை அதிக காற்று குறைவான எரிபொருள் என்ற முறையில் வைத்தால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும். ஆனால் பெர்ஃபாமென்ஸ் சற்றுகுறையும்.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (FI) டைப் வாகனங்களில் இசியூ இந்த வேலையை செய்து கொள்ளுவதனால், சிரமங்கள் இல்லை.

 பைக் மைலேஜ்

5. பிரேக்

தேவையற்ற நேரங்களில் பிரேக்குகளை தவிர்க்கவில்லை என்றால் மைலேஜ் குறையும் அதிவேகத்தில் சென்று திடீரென பிரேக் பிடிப்பதனால் எரிபொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். எனவே தேவையற்ற வேகத்தை தவிர்த்தால் பிரேக்கிங் திறன் கூடும், எனவே மைலேஜ் அதிகரிக்கும்

மேலும் படிக்க ; மைலேஜ் என்பது எமாற்று வேலை ?

பைக் மைலேஜ்

6. டாப் கியர்

அதிகமாக குறைந்த கியரில் இயக்கினால் மைலேஜ் குறையும் எனவே முடிந்த வரை  டாப் கியரில் பயணம் செய்தால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும். டாப் கியர் வேகத்தில் செல்லும் பொழுதும் சற்று குறைவான வேகத்தில் சென்றாலும் அதற்கு ஏற்ப செயல்படும்.

மேலும் படிக்க ; மைலேஜ் அதிகம் பெறும் வழிமுறைகள்

பைக் மைலேஜ்

முதல் பதிவு செய்த நாள் : April 07, 2015 – 05:16 PM