இந்தியாவின் முன்னணி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமீபத்திய FY26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு தொடர்பான கூட்டத்தில், புதிய மூன்று பல்சர் வரிசை பைக்குகளை டிசம்பர் முதல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2 FY26) பஜாஜ் நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிகச்சிறந்த நிதி முடிவுகளைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் ₹15,000 கோடி, செயல்பாட்டு லாபம் (EBITDA) ₹3,000 கோடி-ஐத் தாண்டி, 20.5% லாப விகிதத்தையும் பெற்றுள்ளது. மேலும் நிகர லாபம் (PAT) ₹2,500 கோடி என உயர்ந்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் சேட்டக் இவி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், குறைந்த விலையிலான மற்றொரு சேட்டக் மாடலை ஜனவரியில் அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பால் 350ccக்கு கூடுதலான திறன் பெற்ற மாடல்களுக்கு 40 % வரி விதிக்கப்படுவதால், இந்நிறுவனம் மாற்ற வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக கேடிஎம் மற்றும் டிரையம்ப் ஆகிய பிரீமியம் கூட்டாளிகளுடன் இணைந்து உருவாக்கப்படவுள்ள “350 cc க்கு குறைந்த” என்ஜின் பெற்ற மாடலைகளை 2026 ஆம் ஆண்டின் முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் வெளியிடப்பட உள்ளது.
பல்சரை கடந்து புதிய பிராண்டினை உருவாக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ள நிலையில், அது எந்த மாதிரியான மோட்டார்சைக்கிள் என்ற விவரம் தற்பொழுது தெரியவில்லை.
தற்பொழுது சந்தையில் பல்சர் கம்யூட்டர் வரிசையில் மூன்று மாடல்களை மிகவும் ஸ்போர்ட்டிவான வடிவமைப்பு மற்றும் நவீனத்துவமான வசதிகளை பெற்றதாக வெளியிட திட்டமிட்டுள்ள முதல், மாடல் டிசம்பரிலும், அடுத்த இரு மாடல்கள் முறையே 2026 மார்ச் அல்லது மே மாதம் வரக்கூடும்.
மேலும், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன பிரிவில் மின்சார வாகன சந்தையை விரிவுப்படுத்தவும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
