இந்தியாவில் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு வருகின்றது

மூன்று சக்கர ஆட்டோ வாகனங்களுக்கு மாற்றாக குவாட்ரிசைக்கிள் ரக மாடலாக வடிவமைக்கப்பட்ட பஜாஜ் க்யூட் மாடலை 6 ஆண்டுகளுக்கு பிறகு சந்தையில் பஜாஜ் ஆட்டோ தீவரமான முயற்சியை எடுத்து வருகின்றது. இந்திய சந்தையில் குவாட்ரிசைக்கிள் மாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் க்யூட்

கடந்த 2012 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட RE60 ,தற்போது க்யூட் என்ற பெயரில் 10க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ முயற்சிகள் பாதுகாப்பு சார்ந்த காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போனது.

இந்த வருடத்தின் ஆரம்ப மாதங்களில் உச்சநீதி மன்றம் , குவாட்ரிசைக்கிள் மாடல்களுக்கு என பிரத்தியேக பாதுகாப்பு சட்ட விதிகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவில் புதிய விதிமுறைகள் அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே பஜாஜ் க்யூட் சந்தைக்கு மூன்று முதல் 6 மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஐரோப்பா , ஆப்பரிக்கா , லத்தின் அமெரிக்கா , ஆசியாவில் உள்ள சில நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு பஜாஜ் க்யூட் ஏற்றுமதி செய்ய உள்ளது. பஜாஜ் ஆர்இ60 என்ற பெயருக்கு பதிலாக க்யூட் (QUTE) என பெயரிட்டுள்ளது.

ரூ.1.50 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4ஸ்பார்க் பிளக்குகளை கொண்ட 216சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும்.

பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆகும். 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்சைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.