Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

By MR.Durai
Last updated: 1,March 2025
Share
SHARE

bajaj gogo p7012 electric 3 wheeler

பஜாஜ் ஆட்டோவின் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஆட்டோரிக்‌ஷா பிரிவுக்கு என பிரத்தியேக கோகோ (Bajaj Gogo) பிராண்டினை அறிமுகம் செய்து P5009, P5012, மற்றும் P7012 என மூன்று வகைகளில் ரூ. 3,26,797 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Contents
  • கோகோ P5009
  • கோகோ P5012
  • கோகோ P7012

P5009, P5012, மற்றும் P7012. வகை பெயருக்கான விளக்கம், ‘P’ என்பது பயணிகளுக்கான வாகனம், ’50’ மற்றும் ’70’ அளவுகளை குறிக்கின்ற நிலையில், ’09’ மற்றும் ’12’ ஆகியவை முறையே 9 kWh மற்றும் 12 kWh பேட்டரி திறனை கொண்டுள்ளது.

கோகோ P5009

ஆரம்ப நிலை பஜாஜ் கோகோ பி5009 ஆட்டோ ரிக்‌ஷாவில் 9 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 178 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும்.

மேலும், 0-80 % சார்ஜிங் பெற 4.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில் விலை ரூ. 3,26,797 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

bajaj gogo p5009 electric autorickshaw

கோகோ P5012

கோகோ பி5012 ஆட்டோ ரிக்‌ஷாவில் 12kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 248 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும். மேலும், 0-80 % சார்ஜிங் பெற 5.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளுகின்றது.

bajaj gogo p5012 electric autorickshaw

கோகோ P7012

கோகோ பி7012 மாடலில் 12kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5.5Kw பவர் மற்றும் 36Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக உள்ள நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 251 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும்.

மேலும், 0-80 % சார்ஜிங் பெற 5.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளுகின்ற நிலையில் விலை ரூ. 3,83,001 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக மூன்று வகைகளும் Eco, Power, Climb, Park Assist போன்ற மோடுகளுடன் முழுமையான எல்இடி விளக்குகள், இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்கினை பெற்று ரீஜெரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், 120/80 R12 டயருடன் எல்சிடி டிஸ்பிளே உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்ற டெக்பேக் பெற்றுள்ளது.

bajaj gogo p7012 electric autorickshaw

mahindra be6 batman edition suv
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
TAGGED:bajaj autoBajaj Gogo
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms