Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அதிக மைலேஜ் தரும் 5 ஸ்கூட்டர்களின் விலை, சிறப்புகள்

by நிவின் கார்த்தி
22 February 2024, 3:12 pm
in Auto News
0
ShareTweetSend

best mileage scooters 2024 on road price list

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 2024 மாடல்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின் விபரம், முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி முக்கிய தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் விபரம் ஆனது பயனர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. சராசரியாக 110-125சிசி பிரிவில் உள்ள ஸ்கூட்டர்கள் மிக சிறப்பாக 48  முதல் 55 கிமீ வரை சராசரியாகவும் ஒரு சில மாடல்கள் லிட்டருக்கு 60 கிமீ வரையும் வழங்குகின்றன.

சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடல்களின் மைலேஜ் என்பது ஒவ்வொரு தனிபட்ட நபர்களின் ஓட்டுதல் பழக்க வழக்கத்திற்கு ஏற்றதாக மாறுபடக்கூடும்.

Yamaha Ray ZR 125 Fi

யமஹா நிறுவனம் 125சிசி சந்தையில் விற்பனை செய்து வருகின்ற ரே ZR 125 Fi மற்றும் ஃபேசினோ உள்ளிட்ட மாடல்களில் பொதுவாக  8.2 hp பவரை வழங்கும் 125சிசி Fi என்ஜின் அதிகபட்சமாக 10.3 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Ray ZR 125 Fi மைலேஜ் லிட்டருக்கு 55 கிமீ முதல் 58 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 60 கிமீ வரை வழங்குகின்றது. 2024 யமஹா ரே ZR 125 Fi  ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை அமைந்துள்ளது.

rayzr 125 red color

Suzuki Access 125

அதிகப்படியான சொகுசு தன்மை பெற்ற சிறப்பான சஸ்பென்ஷன் பெற்ற மாடலான  ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்ற 125சிசி 8.6 bhp பவர் மற்றும் 10 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் அவெனிஸ் மற்றும் பர்க்மேன் உள்ளிட்ட மாடல்களிலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

Access 125 மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ முதல் 54 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 56 கிமீ வரை வழங்குகின்றது. 2024 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.16 லட்சம் வரை அமைந்துள்ளது.

suzuki access 125 dual tone left side

 

TVS Jupiter

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரண்டாவது ஸ்கூட்டர் மாடலான ஜூபிடர் ஸ்கூட்டரில் டிவிஎஸ் நிறுவனம் 7.77 hp மற்றும் 8.88 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 110சிசி என்ஜினை பொருத்தியுள்ளது.

Jupiter மைலேஜ் லிட்டருக்கு 48 கிமீ முதல் 53 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 55 கிமீ வரை வழங்குகின்றது. 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.97,000 முதல் ரூ.1.15 லட்சம் வரை அமைந்துள்ளது.

tvs jupiter classic mystic grey

Hero Xoom 110

ஸ்டைலிஷான தோற்றத்தை பெற்றுள்ள ஹீரோ ஜூம் ஸ்கூட்டரும் 110சிசி என்ஜினை பெற்றிருக்கின்றது. மேலும் இந்த பிரிவில் மிக வேகமான ஸ்கூட்டராக விளங்கும் நிலையில்  மைலேஜ் லிட்டருக்கு 48 கிமீ முதல் 50 கிமீ வரை வழங்குகின்றது.

ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் என்ஜின் 7250RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 8 bhp பவர், 5750 RPM-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 2024 ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.91,000 முதல் ரூ.1.04 லட்சம் வரை உள்ளது.

xoom white

Honda Activa

பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் 7.72 bhp பவர் மற்றும் 8.90 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 110சிசி என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் உள்ளது. இதே என்ஜின் டியோ 110 மாடலிலும் உள்ளது.

Activa மைலேஜ் லிட்டருக்கு 46 கிமீ முதல் 50 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 53 கிமீ வரை வழங்குகின்றது. 2024 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.08 லட்சம் வரை அமைந்துள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

Related Motor News

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்கூட்டர் விற்பனை அசுர வளர்ச்சி

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி., சுசூகி ஸ்கூட்டர்கள், பைக்குகள் விலை குறைப்பு

ரூ.97,436 விலையில் டிவிஎஸ் ஜூபிடர் 110ல் ஸ்பெஷல் எடிசன் வெளியானது

2025 யமஹா ரே ZR 125 Fi விற்பனைக்கு வெளியானது

ஸ்கூட்டர் சந்தையில் சரிவை சந்திக்கும் ஹோண்டா., வளர்ச்சி பாதையில் டிவிஎஸ்.!

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

Tags: Hero Xoom 110Honda Activa 6GSuzuki Access 125TVS JupiterYamaha Ray-ZR
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் ஸ்பீடு T4

பண்டிகை காலத்தில் ரூ.16,797 வரை டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 விலை குறைப்பு

Ather Energy

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

ஹோண்டா CB350C ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

ஹார்லி-டேவிட்சன், கேடிஎம், டிரையம்ப், ஏப்ரிலியா பைக்குகளுக்கு ஜிஎஸ்டி மாற்றமில்லை..!

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan