இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 2024 மாடல்களில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 ஸ்கூட்டர் மாடல்களின் என்ஜின் விபரம், முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி முக்கிய தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
கொடுக்கப்பட்டுள்ள மைலேஜ் விபரம் ஆனது பயனர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. சராசரியாக 110-125சிசி பிரிவில் உள்ள ஸ்கூட்டர்கள் மிக சிறப்பாக 48 முதல் 55 கிமீ வரை சராசரியாகவும் ஒரு சில மாடல்கள் லிட்டருக்கு 60 கிமீ வரையும் வழங்குகின்றன.
சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட இந்த மாடல்களின் மைலேஜ் என்பது ஒவ்வொரு தனிபட்ட நபர்களின் ஓட்டுதல் பழக்க வழக்கத்திற்கு ஏற்றதாக மாறுபடக்கூடும்.
யமஹா நிறுவனம் 125சிசி சந்தையில் விற்பனை செய்து வருகின்ற ரே ZR 125 Fi மற்றும் ஃபேசினோ உள்ளிட்ட மாடல்களில் பொதுவாக 8.2 hp பவரை வழங்கும் 125சிசி Fi என்ஜின் அதிகபட்சமாக 10.3 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Ray ZR 125 Fi மைலேஜ் லிட்டருக்கு 55 கிமீ முதல் 58 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 60 கிமீ வரை வழங்குகின்றது. 2024 யமஹா ரே ZR 125 Fi ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1.08 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை அமைந்துள்ளது.
அதிகப்படியான சொகுசு தன்மை பெற்ற சிறப்பான சஸ்பென்ஷன் பெற்ற மாடலான ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்ற 125சிசி 8.6 bhp பவர் மற்றும் 10 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் அவெனிஸ் மற்றும் பர்க்மேன் உள்ளிட்ட மாடல்களிலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.
Access 125 மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ முதல் 54 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 56 கிமீ வரை வழங்குகின்றது. 2024 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.16 லட்சம் வரை அமைந்துள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரண்டாவது ஸ்கூட்டர் மாடலான ஜூபிடர் ஸ்கூட்டரில் டிவிஎஸ் நிறுவனம் 7.77 hp மற்றும் 8.88 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 110சிசி என்ஜினை பொருத்தியுள்ளது.
Jupiter மைலேஜ் லிட்டருக்கு 48 கிமீ முதல் 53 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 55 கிமீ வரை வழங்குகின்றது. 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.97,000 முதல் ரூ.1.15 லட்சம் வரை அமைந்துள்ளது.
ஸ்டைலிஷான தோற்றத்தை பெற்றுள்ள ஹீரோ ஜூம் ஸ்கூட்டரும் 110சிசி என்ஜினை பெற்றிருக்கின்றது. மேலும் இந்த பிரிவில் மிக வேகமான ஸ்கூட்டராக விளங்கும் நிலையில் மைலேஜ் லிட்டருக்கு 48 கிமீ முதல் 50 கிமீ வரை வழங்குகின்றது.
ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் என்ஜின் 7250RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 8 bhp பவர், 5750 RPM-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 2024 ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.91,000 முதல் ரூ.1.04 லட்சம் வரை உள்ளது.
பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் 7.72 bhp பவர் மற்றும் 8.90 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 110சிசி என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் உள்ளது. இதே என்ஜின் டியோ 110 மாடலிலும் உள்ளது.
Activa மைலேஜ் லிட்டருக்கு 46 கிமீ முதல் 50 கிமீ வரை நகர்ப்புற பயன்பாடுகளுக்கு கிடைக்கின்ற நிலையில் ஒரு சிலருக்கு 53 கிமீ வரை வழங்குகின்றது. 2024 ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.1.08 லட்சம் வரை அமைந்துள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…