கவாஸாகி நின்ஜா எச்2 பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் கவாஸாகி நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கினை ரூ.29 இலட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கவாஸாகி நின்ஜா எச்2  பைக்

மிக சிறப்பான பெர்ஃபாரம்ன்ஸை வெளிப்படுத்தக்கூடிய நின்ஜா எச்2 பைக்கில்  197.3பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 998சிசி 4 சிலிண்டர் கொண்ட சூப்பர்சார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 133.5என்எம் ஆகும்.

நேர்த்தியான முகப்பினை கொண்ட நின்ஜா எச்2 ஹைப்பர் பைக்கில் முன்புறத்தில் 330மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 250மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக உள்ளது.

முழுதும் கட்டமைக்கப்பட வாகனமாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்தியாவிற்க்கு 5 பைக்குகள் மட்டுமே 2015 ஆம் ஆண்டிற்க்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

கவாஸாகி பைக் நிறுவனம் மொத்தம் 5 டீலர்களை கொண்டுள்ளது. அவை சென்னை , டெல்லி , மும்பை , கொல்கத்தா , பெங்களூரூ மற்றும் புனே. மேலும் 4 புதிய டீலர்களை இந்த நிதியாண்டில் திறக்க உள்ளனராம்

கவாஸாகி நின்ஜா எச்2  பைக் விலை ரூ. 29 இலட்சம் (ex-showroom, Delhi)

கவாஸாகி நின்ஜா எச்2  பைக்