2017 கவாஸாகி Z250 பைக் விற்பனைக்கு வெளிவந்தது

0

கவாஸாகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிய கவாஸாகி Z250 பைக் மாடலை ரூபாய் 3.09 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இசட் வரிசையில் தொடக்கநிலை மாடலாக இசட்250 பைக் விளங்குகின்றது.

2017 kawasaki z250

கவாஸாகி Z250 பைக்

  • கவாஸாகி இசட்250 பைக் ஆரம்ப விலை ரூபாய் 3.09 லட்சம்
  • 32 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது.
  • ஏபிஎஸ் ஆப்ஷனலாக கூட வழங்கப்படவில்லை.

kawasaki z250 bike

புதிய இசட் 250 பைக் மாடலில் முந்தைய மாடலின் வடிவ அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படாமல், தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரிங் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சின் அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம் சுழற்சியில் 32 பிஹச்பி ஆற்றலையும், 10,000 ஆர்பிஎம் சுழற்சியில் 21 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 6 வேக கியர் பாக்ஸ் உள்ளது.

Z250 பைக்கில் முன்பக்க டயரில் 290 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இதில் ஏபிஎஸ் ஆப்ஷனலாக கூட வழங்கப்படவில்லை. 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

2017 kawasaki z250 1

புதிய கவாஸாகி இசட்250 பைக் ரூ.3.09 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.