கேடிஎம் டியூக் 200 பைக்

0
கேடிஎம் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பஜாஜ் நிறுவனம் 47.18 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.

ktm logo
2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம்(KTM-Kraftfahrzeuge Trunkenpolz Mattighofen) ஒரு வருடத்தில் 8500 டியூக் 200 பைக்களை விற்றுள்ளது குறுப்பிடதக்கதாகும்.
அடுத்த 12 மாதங்களில் இன்னும் 3 கேடிஎம் பைக்கள் இந்தியாவில் வெளிவரும். இன்னும் சில மாதங்களில் கேடிஎம் டியூக் 390 பைக் வெளிவரவுள்ளது.

கேடிஎம் டியூக் 200 பைக் 

கேடிஎம் டியூக் 200 பைக் மிக சிறப்பான தோற்றத்துடன் மனதை கவருகின்றது. இதன் விலைக்கேற்ற தரம் கிடைக்கும். கையாளும் திறன் சிறப்பாக உள்ளதாக பயன்படுத்தபவர்கள் தங்கள் அனுபவத்தால் கூறியுள்ளனர். மைலேஜ் என்பதனை எதிர்பார்க்காமல் இருப்பவர்களுக்கு பொருந்தும்.
கேடிஎம் டியூக் 200
கேடிஎம் டியூக் 200 என்ஜின்

டியூக் 200 பைக்கில் 200 சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்டோர்க் என்ஜின் ஆகும். குளிர்விக்க லிக்கிவ்ட் கூலிங் ஆகும். இதன் சக்தி 25 PS மற்றும் டார்க் 19NM ஆகும்.
இதன் விலை 1,32,950(சென்னை)

கேடிஎம் டியூக் 390 பைக் 

கேடிஎம் டியூக் 390 பைக் வருகிற மார்ச் மாதம் வெளிவரவுள்ளது. 375 சிசி என்ஜினுடன வெளிவரும் .இதன் சகதி 45PS இருக்கும். விலை 1.75 முதல் 2 இலட்சம் வரை இருக்கும்.
KTM 390 Duke bike