டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஸ்போர்ட்டிவ் பைக் விற்பனைக்கு வந்தது

0

TVS Apache RR 310 launched 35 ஆண்டுகால டிவிஎஸ் ரேசிங் பிரிவின் அனுபவத்தினால் வடிவமைக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் ரூ. 2.05 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310

TVS Apache RR 310 launch

Google News

இந்தியாஉட்பட சர்வதேச நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெர்லிஸ் ஃபிரேம் அடிச்சட்டை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பைக் மிகவும் ஸ்டைலிஷான இரட்டை பிரிவு கொண்ட வட்ட வடிவ முகப்பு விளக்குடன் பை-எல்இடி விளக்குகளை கொண்டுள்ளது. மிக நேர்த்தியான பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ள ஆர்ஆர்310 பைக்கில் பின்புறத்தில் அமைந்துள்ள டெயில் விளக்கு எல்இடி ஒமேகா வடிவத்தில் அமைந்துள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0 முதல் 60 கிமீ வேகத்தை  2.63 விநாடிகளில் எட்டும் திறனுடன்,அதிகபட்சமாக மணிக்கு 165 கிமீ வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் மைலேஜ் லிட்டருக்கு 25 முதல் 30 கிமீ அமைந்திருக்கும்.

இரட்டைப் பிரிவு எல்இடி முகப்பு விளக்குடன் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடன், தங்க நிறத்துடன் கூடிய யூஎஸ்டி ஃபோர்க்குகள், 17 அங்குல அலாய வீல் 5 ஸ்போக்குகளுடன் கூடிய மிச்செலின் ரேடியல் டயர் பெற்றதாக வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் விலை பட்டியல்

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ரூ. 2.05 லட்சம்