டுகாட்டி எக்ஸ்டியாவெல் மற்றும் எக்ஸ்டியாவெல் எஸ் விற்பனைக்கு வந்தது

0

டுகாட்டி சூப்பர்பைக் நிறுவனத்தின் டுகாட்டி எக்ஸ்டியாவெல் மற்றும் எக்ஸ்டியாவெல் எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்களின் எக்ஸ்டியாவெல் விலை ரூ. 15.87 லட்சம் மற்றும் எக்ஸ்டியாவெல் எஸ் விலை ரூ.18.47 லட்சம் ஆகும்.

எக்ஸ்டியாவெல் மற்றும் எக்ஸ்டியாவெல் எஸ் பைக்குகளில் 156 குதிரை சக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 1262 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 128.9 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போர்ட் , டூரிங் மற்றும் அர்பன்  மூன்று விதமான ரைடிங் மோட்களை பெற்றுள்ளது.

Google News

பல நவீன ஆப்ஷன்களை பெற்றுள்ள எக்ஸ்டியாவெல் மற்றும் எக்ஸ்டியாவெல் எஸ் வரிசை பைக்குகளில் ரைட் பை வயர் திராட்டில் , கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷ்ன் கன்ட்ரோல் , க்ரூஸ்கன்ட்ரோல் , டுகாட்டி பவர் லான்ச் என பல வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.   எக்ஸ்டியாவெல் எஸ் மாடலில் கூடுதலாக முழுமையான எல்இடி லைட்டிங் கிளஸ்ட்டர் , இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய பூளூடூத் இணைப்பு என பல சிறப்பு வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

  • டுகாட்டி எக்ஸ்டியாவெல் விலை ரூ. 15.87 லட்சம்
  •  டுகாட்டி எக்ஸ்டியாவெல் எஸ் விலை ரூ.18.47 லட்சம்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )