டொமினார் 400 பைக் ஒரு ஹெவிவையிட் பாக்ஸர் – ராஜீவ் பஜாஜ்

0

வருகின்ற டிசம்பர் 15ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் டொமினார் 400 பைக் ஹெவிவெயிட் பாக்ஸர் என ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு எதிராக டொமினார் 400 நிலைநிறுத்தப்பட உள்ளது.

Bajaj Dominar 400 teased

Google News

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பல்சர் சிஎஸ்400 என காட்சிக்கு வந்த பைக்கின் உற்பத்தி நிலை மாடலின் புதிய பெயர்தான் டொமினார் 400 ஆகும். நேரடியாக ராயல் என்ஃபீல்டு பைக்குடன் போட்டியை பஜாஜ் ஆட்டோ ஏற்படுத்தியுள்ளது.

டொமினார் 400 பைக்கில் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம் பெற்றுள்ள அதே இன்ஜினை ட்யூன் செய்து 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். மேலும் முழு எல்இடி ஹெட்லேம்ப் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் என பலநவீன  வசதிகளை பெற்றதாக விளங்கும்.

சமீபத்தில் தி ஹிந்து பிசினஸ் லைன் (Hindu Business Line) இதழுக்கு ராஜீவ் பஜாஜ் அளித்துள்ள பேட்டியில் “தனது போட்டியாளரை போல பாரம்பரிய டிசைன் இல்லாமல் நவீன டிசைன் வடிவ தாத்பரியங்களுடன் , மிக நேர்த்தியாகவும், கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த கட்டமைப்பான டிசைன் தாத்பரியங்களை பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஒரு சுமோ மறப்போர் மல்யுத்த வீரன் (Sumo wrestler) , எங்களுடையது ஒரு ஹெவிவெயிட்  குத்துச்சண்டை வீரன் (heavyweight boxer) என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பஜாஜ் கூறுகையில் பஜாஜ் டொமினார் 400 பைக் விற்பனை இலக்காக மாதம் 10,000 என்ற அளவில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலே திட்டமிடப்பட்டுள்ளதால் விலை மிக சவாலாக போட்டியாளர்களை விட குறைந்ததாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.