Automobile Tamil

பஜாஜ் டோமினார் 400 பைக் பற்றி 10 தகவல்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் அதிக திறன் வாய்ந்த மாடலாக வந்துள்ள பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக் ₹ 1.38 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டோமினார் 400 பைக்கில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. பல்சர் சிஎஸ்400

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக பஜாஜ் பல்சர் சிஎஸ்400 (Cruiser Sport 400 – CS 400) என்ற பெயரில் க்ரூஸர் ஸ்போர்ட்டிவ் மாடல் காட்சிக்கு வந்தது. பல்சர் பிராண்டிலே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய பிராண்டை உருவாக்க பஜாஜ் முடிவு செய்தது.

 

2. புதிய பிராண்டு பெயர்

பல்சர் அணிவரிசையில் 135சிசி முதல் 200சிசி வரையிலான எஞ்ஜின் தேர்வுகளில் கிடைத்து வருகின்ற நிலையில் 400சிசி எஞ்ஜின் இடம்பெற உள்ள இந்த பைக்கிற்கு புதிய பிராண்டு பெயரை வைக்க பஜாஜ் ஆட்டோ முடிவு செய்திருந்த நிலையில் முதலில் பல்சர் விஎஸ்400 அதன்பிறகு க்ராடோஸ் விஎஸ்400 (Vantage Sport 400 – VS 400) என கூறுப்பட்ட நிலையில் தற்பொழுது இறுதியாக டோமினார் 400 என விற்பனைக்கு வந்துள்ளது.

க்ரூஸர் ரக பைக்கிகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான பெயராகவே ஸ்பானிஷ் வார்த்தையில் இருந்து டோமினார் (Dominar) என தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3. வடிவம்

மிக நேர்த்தியான வடிவத்தை பெற்ற கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ள உற்பத்தி நிலையின் வடிவமும் சிஎஸ்400 பைக்கினை முழுமையாக சார்ந்துள்ளது. இந்திய தயாரிப்பாளர்களில் மிக சிறப்பான முறையில் முழு எல்இடி ஹெட்லேம்ப் அம்சத்தை சேர்த்து பஜாஜ் போட்டியாளர்களை அசர வைத்துள்ளது. வெள்ளை , நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

அசர வைக்கும் தோற்றத்துடன் பல நவீன அம்சங்களை பெற்ற மாடலாக விளங்கும் டொமினார் 400 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர் , டேக்கோமீட்டர் , எரிபொருள் அளவு , டிரிப் மீட்டர் மற்றும் ஓடோமீட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது.

4. டொமினார் 400 எஞ்ஜின்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அங்கமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

5. சிறப்பு வசதிகள்

பல்வேறு வசதிகளை கொண்ட மாடலாக வரவுள்ள இந்த பைக்கில் குறிப்பாக முழு எல்இடி தானியங்கி ஹெட்லேம்ப் (AHO) , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , முன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் என பல வசதிகளை பெற்றதாக இருக்கும்.

ட்வீன் சேனல் ஏபிஎஸ் பிரேக் அம்சமானது டாப் வேரியன்டில் ஆப்ஷனலாக கிடைக்கின்றது. மேலும் ஏபிஎஸ் இல்லாத மாடலும் டிஸ்க் பிரேக் மாடலும் கிடைக்கின்றது.

 

6. போட்டியாளர்கள்

பஜாஜ் டோமினார் பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மஹிந்திரா மோஜோ ,ராயல் என்ஃபீல்டு  கிளாசிக் 350 , டியூக் 200 மற்றும் டிஎன்டி 25  பைக்குகளுடன் சந்தையில் போட்டியிடும்.

7. எதிர்பார்ப்புகள்

மிக சவாலான விலையில் அமைந்துள்ள டோமினார் 400 பைக் நேரடியாக ராயல் என்ஃபீல்டு புல்லட்களுக்கு போட்டியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ஃபாமென்ஸ் ரக மோட்டார்சைக்கிள் சந்தையில் 20 சதவீத பங்களிப்பினை பெறும் நோக்கில் மாதம் 15,000 பைக்குகளும் வருடத்திற்கு 2,00,000 டோமினார் பைக்குளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். மேலும் 2001 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த பல்ஸர் பைக் புதிய ஸ்போர்ட்டிவ் சாகப்தத்தை உருவாக்கியது போலவே பிரிமியம் சந்தையில் டோமினார் புதிய தொடக்கத்தை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8. முன்பதிவு

பஜாஜ் டோமினார் இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.ரூ.9000 செலுத்தி டொமினார் 400 பைக்கினை முன்பதிவு செய்துகொண்டால் வருகின்ற ஜனவரி மாதங்களில் டெலிவரி கிடைக்கும்.

9. ஆரம்பம்

முதற்கட்டமாக இந்தியாவின் 22 முன்னனி மாநகரங்களில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பைக் தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் கிடைக்க உள்ளது. மற்ற நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

10 . டோமினார் 400 பைக் விலை

யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடி ஆரம்ப விலையை கொடுத்து பஜாஜ் ஆட்டோ வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.38,625 லட்சம் (டிஸ்க் பிரேக்)

டோமினார் 400 பைக் விலை ரூ. 1.52,875 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)

( தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை )

[youtube https://www.youtube.com/watch?v=y6Q_nf3KMI4]

 

Exit mobile version