ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx விற்பனைக்கு வந்தது.!

சர்வதேச அளவில் 8 க்கு மேற்பட்ட வகைகளில் விற்பனை செய்யப்படுகின்ற ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx பைக் மாடலின் ஒரே வேரியன்ட் மட்டுமே இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx

இந்தியாவில் அதிகபட்சமாக 20 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உள்ள டைகர் எக்ஸ்புளோரர் Xcx மாடலில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது. குறிப்பாக பாதி அலங்கரிக்கப்பட்டு எல்க்ட்ரானிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான விண்ட்ஸ்கீரின் பெற்றிருப்பதுடன், மிக உறுதியான கட்டுமானத்தை பெற்ற இந்த மாடல் வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் ஆகிய மாடல்களில் கிடைக்க உள்ளது.

137 bhp பவரை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த 1215 cc இன்லைன் 3 சிலிண்டர் பெற்ற லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 123 Nm டார்க் வரை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் ரைட் பை வயர், சிலிப் அசிஸ்ட் கிளட்ச், சுவிட்சபிள் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் ரெயின், ரோடு,ரைட் மற்றும் ஆஃப் ரோடு என 4 விதமான தேர்வுகளை பெற்ற டிரைவிங் மோட் உள்ளது.

முன்பக்கத்தில் 48 மிமீ பயணிக்கும் WP அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் 193 மிமீ பயணிக்கும் ஆட்டோமேட்டிக் ப்ரீ லோடு மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் இந்த பைக்கின் முன்புற டயரில் 4 பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 305 மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 282 மிமீ ஒரு டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது. மேலும் டயர் பிரிவில் முன்பகுதில் 19 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் வழங்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ப டைகர் எக்ஸ்புளோரர் Xcx பைக் விலை ரூ.18.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

 

Recommended For You