Automobile Tamilan

பஜாஜ் அவென்ஜர் 220 பைக் தங்க நிறத்தில் – updated

தற்பொழுது வெளியாகியுள்ள ரகசிய படங்களின் வாயிலாக பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் பைக் வேரியண்ட் தங்க நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலையிலே அவென்ஜர் 220 க்ரூஸ் தொடர்கின்றது.

Bajaj-Avenger-Cruise-220-Desert-Gold

 

க்ரூஸர் ரக அவென்ஜர் பைக் 150 ஸ்டீரீட் , 220 க்ரூஸ் , 220 ஸ்டீரீட் என மூன்று வேரியண்டிலும் மூன்று விதமான வண்ணங்களில் விற்பனைக்கு அறிம்கம் செய்யப்பட்டது. புதிய அவென்ஜர் பைக் அறிமுகத்திற்கு விற்பனையில் அவென்ஜர் பைக் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க ; பஜாஜ் அவென்ஜர் விற்பனை அதிகரிப்பு

க்ரூஸ் வேரியண்டில் ஸ்போக்டூ வீல் , வின்ட்ஷில்டு பெற்றிருக்கும். ஸ்டீரிட் வேரியண்டில் அலாய் வீல் மற்றும் கருப்பு வண்ணத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படங்களில் தங்கநிறத்தில் அவென்ஜர் 220 க்ரூஸ் காட்சியளிக்கின்றது.

19.03பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

மேலும் படிக்க ; அவென்ஜர் 220 க்ரூஸ் vs அவென்ஜர் 220 ஸ்டீரிட்

புதிய கோல்டன் வண்ண அவென்ஜர் 220 க்ரூஸ் விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கிடைக்கும்.

 

 

Exit mobile version