Automobile Tamil

பஜாஜ் பல்சர் NS160 பைக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.!

160 சந்தையில் நிலவுகின்ற கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பஜாஜ் பல்சர் 160 பைக்கில் உள்ள சிறப்பு வசதிகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

புதிய பஜாஜ் பல்சர் 160 பைக்

மிக கடுமையான போட்டிகள் நிறைந்த 150 சிசி முதல் 160 சிசி வரையிலான சந்தையில் உள்ள மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பல்சர் 160 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நகரங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

ஸ்டைல்

மிரட்டலான பெட்ரோல் டேங்க் டூயல் வண்ணத்திலான அம்சங்களுடன் விளங்குகின்ற பல்ஸர் 160 பைக்கில் நீலம் , சிவப்பு மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும். பல்சர் என்எஸ் 200 பைக் மாடலை விட 10 கிலோ வரை எடை குறைந்த மாடலாக விளங்குகின்றது.

எஞ்சின்

புதிய பஜாஜ் பல்சர் NS160 மாடலில் 15.5 hp சக்தியை வெளிப்படுத்தி 14.6 என்எம் டார்கினை வெளிப்படுத்துகின்ற 160.3 சிசி ஆயில் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபாமென்ஸ்

சிறப்பான டார்க் மற்றும் பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் வகையிலான இந்த மாடலில் உள்ள டிராஃபிக் உள்ளிட்ட சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் சிறப்பான செயல்திறனையும் வெளிப்படுத்தும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளது. மைலேஜ் அம்சங்களில் கவனிக்கதக்க வகையிலும் இந்த மாடல் உள்ளது.

முன்புற டயர்களுக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயர்களுக்கு 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்

அப்பாச்சி 160 ஆர்டிஆர், யமஹா FZ-S FI, ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் சுசுகி ஜிக்ஸெர் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்சர் 150 மற்றும் 180 பைக்க்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

விலை

சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.81,444 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வாங்கலாமா ?

எஞ்சின் பவர் மற்றும் பெர்ஃபாமென்ஸ், பிரேக்கிங் என அனைத்திலும் சிறந்த திறனை பெற்றுள்ள பல்சர் 160 மைலேஜ் சராசரியாக 42 முதல் 46 கிமீ வரை கிடைக்க பெறலாம்.

Bajaj Pulsar NS 160 Image gallery

 

Exit mobile version