பெண்கள் விரும்பும் 6 ஸ்கூட்டர்கள் விலை மற்றும் விபரங்கள்..!

0

இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் பெண்கள் விரும்புகின்ற 5 ஸ்கூட்டர்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். ஸ்கூட்டர்களின் நுட்ப விபரம் மற்றும் தமிழ்நாடு விலை பட்டியலை காணலாம்.

tvs jupiter new colour

Google News

பெஸ்ட் லேடிஸ் ஸ்கூட்டர்

இருசக்கர வாகன சந்தையில் பைக்குகளுக்கு இணையான வேகத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஸ்கூட்டர்களை வாங்கும் நிலை சந்தையில் அதிகரித்து வருவதனால் ஸ்கூட்டர் சந்தை அமோகமான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெண்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்களை இங்கே காணலாம்.

yamaha fascino sideview

 

1. யமஹா ஃபேசினோ

மிகவும் ஸ்டைலிசான மற்றும் கிளாசிக் லுக் அம்சத்தை பெற்றதாக விளங்குகின்ற யமஹா ஃபேசினோ மொத்தம் 6 நிறங்களில் கிடைக்கின்ற இந்த மாடலில் யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய 113சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.1 hp ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 8.1 என்எம் டார்க்கினை வழங்குகின்றது.

yamaha fascino colors

இந்த ஸ்கூட்டரில் இருக்கை அடிப்பகுதியில் 21 லிட்டர் கொள்ளளவு பெற்ற இடவசதி முன்பக்க பேனல் கீழ் பகுதியில் வாட்டல் பாட்டில், மொபைல் போன்றவற்றை வைக்கும் வசதிகளை கொண்டதாக உள்ளது.

ஜிஎஸ்டிக்கு பிறகு தற்போது யமஹா ஃபேசினோ விலை ரூ. 56,191 எக்ஸ்-ஷோரூம் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

2. டிவிஎஸ் ஜூபிடர்

நம்பகமான இரு சக்கர வாகனங்களுக்கு பெயர் பெற்ற மற்றொரு நிறுவனம் டிவிஎஸ் இந்நிறுவனத்தின் மிக சிறப்பான கையாளுமை திறன் பெற்ற ஜூபிடர் சிறப்பான மைலேஜ் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடியதாக சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

tvs jupiter millionR edition

மற்ற நிறுவனங்களை போல அல்லாமல் ஜூபிடர் மாடலிலே டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக வழங்கப்பட்டு உள்ளதை தவிர மொபைல் சார்ஜிங் சாக்கெட் பெற்று 8.2 hp ஆற்றலை வழங்கும் 109.7சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 8Nm வரை டார்க்கினை வழங்குகின்றது.

ஜிஎஸ்டிக்கு பிறகு தற்போது டிவிஎஸ் ஜூபிடர் விலை ரூ. 53,417, zx – ரூ.55,625  zx டிஸ்க்- ரூ.57,717 ஆகிய  எக்ஸ்-ஷோரூம் என தமிழகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

3. ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா மாதந்தோறும் சாரசரியாக 2.50 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆகின்ற இந்தியாவின் முதன்மமையான இருசக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்ட போன்ற பெருமைகளுக்கு உரிய ஆக்டிவா ஹெச்இடி எனப்படும் ஹோண்டா இக்கோ டெக்னாலாஜி நுட்பத்தை பெற்ற 110சிசி எஞ்சினை கொண்டுள்ளது.

Honda Activa 4G side view

ஆக்டிவா ஸ்கூட்டலில் 4ஜி, ஆக்டிவா-ஐ மற்றும் ஆக்டிவா 125 போன்றவை விற்பனையில் உள்ள ஆக்டிவா 4ஜி மாடலில் 8.0 hp ஆற்றலை வழங்கும் 109.19சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 8Nm வரை டார்க்கினை வழங்குகின்றது.

ஜிஎஸ்டிக்கு பிறகு தற்போது ஹோண்டா ஆக்டிவா 4G விலை ரூ. 53,218 எக்ஸ்-ஷோரூம் என தமிழகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

4. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

இந்தியாவின் முதன்மையான நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாக வெளிவந்த மேஸ்ட்ரோ எட்ஜ் அமோக ஆதரவினை ஹீரோ ஸ்கூட்டர் சந்தையிலும் பெற வழி வகுத்து வருகின்றது. இதில் மேலும் மொபைல் சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளுடன்  113சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.0 hp ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 8.7 என்எம் டார்க்கினை வழங்குகின்றது.

hero duet mastero edge

ஜிஎஸ்டிக்கு பிறகு தற்போது  மேஸ்ட்ரோ எட்ஜ் விலை ரூ. 53,061-ரூ.54,071 எக்ஸ்-ஷோரூம் என தமிழகத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

5. யமஹா ரே

யமஹா நிறுவனத்தின் ரே வரிசை மாடலில் ரே இசட் சிறப்பான ஸ்டைலிஷ் கொண்டதாக யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய 113சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.1 hp ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 8.1 என்எம் டார்க்கினை வழங்குகின்றது.

YamahaRayZ

ஜிஎஸ்டிக்கு பிறகு தற்போது யமஹா ரே இசட் விலை ரூ. 51,919 எக்ஸ்-ஷோரூம் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

வழங்கப்பட்டுள்ள பெரும்பாலன மாடல்கள் ரூ. 55,000 விலைக்குள் எக்ஸ்-ஷோரூம் விலையில் அமைந்துள்ள மாடல்களாகும். கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை மாறுபடலாம்.