Site icon Automobile Tamilan

பெனெல்லி டிஎன்டி 135 மினி பைக் வருகை விபரம்

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள முதல் மினி பைக் மாடலான பெனெல்லி டிஎன்டி 135 மினி பைக் மாடல் முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்தியாவில் காட்சிக்கு வந்தது.

இந்தியாவின் பிரிமியம் பைக் சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும்நிலையில் வெளியாக உள்ள பெனெல்லி TNT135 பைக் மாடலானது டிஎன்டி 25 பைக்கின் டிசைன் தாத்பரியங்களை பெற்றிருப்பதுடன் ஸ்கூட்டர்களில் இடம்ப்ற்றுள்ள குறைந்த அகலம் கொண்ட டயரினை போல 12 அங்கு வீல் பெற்று மினி மாடலாக காட்சி தருகின்றது.

பெனெல்லி TNT 135 என்ஜின்

கம்யூட்டர் பைக்கினை போன்ற குறைந்த சிசி என்ஜினை பெற்றுள்ள டிஎன்டி 135 பைக்கில் இடம்பெற்றுள்ள 135சிசி என்ஜின் 12.5 பிஹெச்பி ஆற்றல் , 10.8 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 12 அங்குல வீலில் 120/70 முன்பக்க டயர் மற்றும் 130/70 என்ற அளவிலும் பின்பக்க டயரினை பெற்று விளங்குகின்றது. முன்புறத்தில் இன்வெர்டேட் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது. முன்புற டயரில் 220மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 190மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று விளங்குகின்றது.

ஹோண்டா நவி போன்ற தோற்ற அமைப்பினை கொண்ட  டிஎன்டி 135 பைக்கிற்கு இந்தியாவில் நேரடியான போட்டியாளர்கள் இல்லாத மாடலாக சந்தைக்கு வரவுள்ளது. சர்வதேச அளவில் இந்த  பைக்கின் போட்டியாளர்கள் ஹோண்டா க்ரூம் மற்றும் கவாஸாகி இசட்125 போன்றவை ஆகும்.

நேரடியான போட்டியாளராக இல்லையென்றாலும் பெனெல்லி TNT135 பைக்கின் விலை ரூ1.25 லட்சத்தில் விற்பனைக்கு பிப்ரவரி 2016யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version