பெனெல்லி டிஎன்டி25 பைக் விற்பனைக்கு வந்தது

0

பெனெல்லி டிஎன்டி25 பைக் ரூ.1.68 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. பெனெல்லி சூப்பர் பைக் நிறுவனத்தின் தொடக்க நிலை மாடலாக பெனெல்லி டிஎன்டி25 ஸ்டீரிட் ஃபைட்டர் பைக் வந்துள்ளது.

beneli-tnt-25

Google News

இந்தியாவுக்கு வந்த சில மாதங்களில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள பெனெல்லி நிறுவனம் பைக்குகளின் தொடக்க நிலை மாடலாக வந்துள்ள பெனெல்லி டிஎன்டி25 பைக் சிறப்பான வரவேற்பினை பெறும்.

TNT300 பைக்கின் மாடலின் அமைப்பிலே உள்ள TNT25  பைக்கில் 28.16 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 249சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் டார்க் 21.61 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

பெனெல்லி டிஎன்டி25  பைக்கின் முன்புறத்தில் இன்வெர்டேட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் ஹைட்ராலிக் மோனோசாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெனெல்லி டிஎன்டி 25 பைக்கில் சிவப்பு , வெள்ளை மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது. பிரிமியம் மற்றும் ஸ்டான்டர்டு வேரியண்டில் கிடைக்கின்றது.

benelli-TNT-25

டிஎன்டி25 பைக்கின் போட்டியாளர்கள் மஹிந்திரா மோஜோ மற்றும் கேடிஎம் டியூக் 200 ஆகும்.

பெனெல்லி டிஎன்டி25 பைக் விலை

பெனெல்லி டிஎன்டி25 ஸ்டான்டர்டு – ரூ. 1.68 லட்சம்

பெனெல்லி டிஎன்டி25 பிரிமியம் – ரூ. 1.75 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

 

Benelli TNT25 launched in India