பெனெல்லி டொர்னேடோ 302 பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்..!

இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிமியம் பைக் நிறுவனங்களில் ஒன்றான இத்தாலி பெனெல்லி நிறுவனத்தின் பெனெல்லி டொர்னேடோ 302 முழுதும் அலங்கரிங்கப்பட்ட பைக் மாடலாகும்.

benelli tornado 302

பெனெல்லி டொர்னேடோ 302

தொடக்கநிலை மற்றும் நடுத்தர பிரிவு பிரிமியம் பைக் விற்பனையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் பெனெல்லி  நிறுவனத்தின் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட முதல் மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள டொர்னேடோ 302 பைக்கில் இடம்பெற்றுள்ள 300சிசி இஞ்ஜின் 36 PS ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 27 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள பெனல்லி டிஎன்டி 300 பைக்கின் அலங்கரிக்கப்பட்ட மாடலான டொர்னாடோ 302 முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் பின் டயரில் ஒற்றை டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் ஏபிஎஸ் பிரேக் இனைந்திருக்கும்.

பாகங்களை தருவித்து டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் ஆலையில் ஒருங்கினைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதால சவாலான விலையில்  அமையும் என்பதனால் போட்டியாளர்களான யமஹா ஆர்3 , கேடிஎம் ஆர்சி390 மற்றும் நின்ஜா 300 போன்ற பைக்குகளுக்கு கடும் சவாலாக அமையும் வருகின்ற ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பெனெல்லி டொர்னேடோ 302 விலை ரூ.3 லட்சம் முதல் 3.50 லட்சத்தில் வரலாம். தற்போது டீலர்கள் வாயிலாக ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.