பெனெல்லி பைக்குகள் விற்பனைக்கு வந்தது

0
இத்தாலியின் பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 5 பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெனெல்லி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனையை தொடங்கியுள்ளது.
பெனெல்லி பைக்

டெல்லி , மும்பை , சென்னை, கோல்கத்தா,  பெங்களூரூ, அகமதபாத் , ஹைதராபாத், கோவா மற்றும் புனே ஆகிய இடங்களில் முதற்கட்டமாக பெனெல்லி டீலர்களை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக டிஎன்டி 300 , டிஎன்டி 600ஐ , டிஎன்டி 600ஜிடி , டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் என  மொத்தம் 5 பைக்குகளை விற்பனைக்கு வந்துள்ளது.

பெனெல்லி டிஎன்டி 300

பெனெல்லி டிஎன்டி 300 பைக்கில் 36.2பிஎச்பி ஆற்றலை வெளிப்பட்டுத்தக்கூடிய 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

 மிகவும் நேர்த்தியாக விளங்கும் டிஎன்டி 300 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் இல்லை. பெனெல்லி டிஎன்டி 300 பைக் விலை ரூ.2.83 லட்சம் ஆகும்.

பெனெல்லி டிஎன்டி 600ஐ மற்றும் 600ஜிடி

பெனெல்லி டிஎன்டி 600ஐ மற்றும் 600ஜிடி பைக்கில் 80.5பிஎச்பி ஆற்றலை வெளிப்பட்டுத்தக்கூடிய 600சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மிகவும் நேர்த்தியாக விளங்கும் டிஎன்டி 600ஐ பைக் அலங்கரிக்கபடாத பைக்காகவும் 600 ஜிடி  அலங்கரிக்கப்பட்ட(Full-Faired bike) பைக்காகவும் விளங்குகின்றது. பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் விலை ரூ.5.15 லட்சம் மற்றும் 600 ஜிடி விலை ரூ.5.63 லட்சம் ஆகும்.

பெனெல்லி டிஎன்டி 899


பெனெல்லி டிஎன்டி 899 பைக்கில் 123.4பிஎச்பி ஆற்றலை வெளிப்பட்டுத்தக்கூடிய 898சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்படாத(Naked Bike) பைக்காக விளங்கும் டிஎன்டி899 பைக் மிக சிறப்பான ஆற்றல் மற்றும் செயல் திறன் கொண்டதாகும். பெனெல்லி டிஎன்டி 899 பைக் விலை ரூ.9.48 லட்சம் ஆகும்.

பெனெல்லி டிஎன்டி ஆர்

பெனெல்லி டிஎன்டி ஆர் பைக்கில் 155பிஎச்பி ஆற்றலை வெளிப்பட்டுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த 1130சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பெனெல்லி டிஎன்டி ஆர் பைக் விலை ரூ.11.81 லட்சம் ஆகும்.

பெனெல்லி பைக்குகள் அனைத்து இந்தியாவிலே பாகங்களை இறக்குமதி செய்து டிஎஸ்கே மோட்டோவீல் தொழிற்சாலையில் கட்டமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

வரும்காலத்தில் பாகங்களை இங்கே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனராம். அடுத்தடுத்து புதிய பைக்குகளை களமிறக்க பெனெல்லி திட்டமிட்டுள்ளதாம்.

பெனெல்லி பைக் விலை விபரம் (ex-showroom , Delhi)

பெனெல்லி டிஎன்டி 300 பைக் விலை ரூ.2.83 லட்சம்

பெனெல்லி டிஎன்டி 600ஐ பைக் விலை ரூ.5.15 லட்சம்

பெனெல்லி டிஎன்டி 600ஜிடி பைக் விலை ரூ.5.63 லட்சம்

பெனெல்லி டிஎன்டி 899 பைக் விலை ரூ.9.48 லட்சம்

பெனெல்லி டிஎன்டி ஆர் பைக் விலை ரூ.11.81 லட்சம்