மஹிந்திரா செஞ்சூரோ சிறப்பு எடிசன் விற்பனைக்கு வந்தது

0

மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவின் மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் சிறப்பு எடிசனை மிர்ஸியா என்கின்ற இந்தி திரைபடத்தினை மையமாக மஹிந்திரா செஞ்சுரோ மிர்ஸியா ரூ. 46,750 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கியுள்ள ‘மிர்ஸியா’  என்கின்ற திரைப்படத்தினை மையமாக கொண்டு வெளியிட்டப்பட்டுள்ள மிர்ஸியா ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஸ்டிக்கரிங் மற்றும் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. நடுத்தர வேரியன்ட் டிரம் பிரேக் ராக்ஸ்டார் செஞ்சூரோ எடிசனில் மட்டுமே கிடைக்கின்றது.

Google News

இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 8.4 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 106.7 சிசி MCI-5 (Micro-Chip ignited-5 curve) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 8.5 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மற்ற மாடல்களில் இருந்த வித்தியசத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்க நிறத்தில் குதிரை வடிவ ஸ்டிக்கரிங் பெற்றிருக்கும். மற்றபடி உள்ள வசதிகள் ஃபிளிப் கீ, அலாய் வீல் ,எல்இடி டெயில் விளக்கு , எலக்ட்ரிக் ஸ்டார்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

110சிசி சந்தையில் விற்பனையில் உள்ள மாடல்களுடன் மஹிந்திரா செஞ்சூரோ சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது. மஹிந்திரா செஞ்சூரோ மிர்ஸியா விலை ரூ. 46,750 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும்.