மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் விற்பனைக்கு வந்தது

வருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி மஹிந்திரா மோஜோ டூரர் எடிசன் மாடலை ரூ.1.88 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ் ரக மோஜோ மாடலின் டூரர் பைக் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளிவந்தது.

அதிகப்படியான சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ள மோஜோ டூரர் பதிப்பில் சிறப்பான பல கூடுதல் துனைகருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. மோஜோவில் எவ்விதமான ஆற்றல் மாற்றங்கள் இல்லாமல் வந்துள்ளது.

27 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் உச்ச வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரியாக மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கும். முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர்.

மோஜோ டூரர் சிறப்பு கருவிகள்

  • மொபைல் ஹோல்டர்
  • 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேக்னட்டிக் டேங்க் பேக்
  • 38 லிட்டர் கொள்ளவு கொண்ட சேடில் பேக் மற்றும் கேரியர்
  • பேன்னியர் மவுன்ட்
  • 20W பனி விளக்குகள்
  • இன்ஜின் , டேங்க் மற்றும் ரேடியேட்டர் தடுப்புகள்

மேலும் மோஜோ டூரர் எடிஷனில் சிறப்பு சலுகையாக மஹிந்திரா டூ விலர்ஸ் பிரிவால் தயாரிக்கப்பட்டு சிறப்பு  டூரர் ஜாக்கெட் இலவசமாக வழங்குகின்றது. தொலைதூர பயணத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பான வசதிகளுடன் மிகசிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் மாடலாக விளங்குகின்றது.

மஹிந்திரா மோஜோ டூரர் எடிஷன் விலை ரூ. 1.88 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Share
Published by
automobiletamilan

Recent Posts

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…

2021/02/26

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24