யமஹா சல்யூடோ பைக் விற்பனைக்கு வந்தது

யமஹா சல்யூடோ 125சிசி பைக்கினை ரூ.52,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யமஹா சல்யூடோ

யமஹா சல்யூடோ பைக்கில் புதிய பூளூ கோர் என்ஜின் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள  8.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 10.1 என்எம் ஆகும். 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

முன் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரண்டு ஸ்வின்கிராம் சாக் அப்ஷர்கள் பொருத்தியுள்ளனர்.

112 கிலோ எடை கொண்ட சல்யூடோ பைக் 125சிசி பைக்குகளில் மிக குறைவான எடை கொண்டதாகும். மேலும் யமஹா சல்யூடோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 78கிமீ ஆகும்.

7.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் பொருத்தியுள்ளனர். எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர் வசதியும் உள்ளது.

யமஹா சல்யூடோ பைக் விலை  (ex-showroom, Delhi)

யமஹா சல்யூடோ பைக் விலை ரூ.52,000

யமஹா சல்யூடோ