யமஹா R3 பைக் விற்பனைக்கு வந்தது

0
யமஹா ஆர்3 ஸ்போர்ட்டிவ் பைக் ரூ.3.25 விலையில் விற்பனைக்கு அறிமுகம் வந்துள்ளது. புதிய யமஹா  R3 பைக் இந்தியாவில் பாகங்கள் ஒருங்கினைக்கப்பட உள்ளது.

யமஹா R3 பைக்

யமஹா ஆர்15 பைக்கிற்க்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ள யமஹா ஆர்3 பைக் மிக சிறப்பான ஸ்டைலுடன் ஸ்போர்டிவ் தோற்றத்தில் இரட்டை முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது.
ஆனால் ஏபிஎஸ் மாடல் ஆப்ஷனாலாக விற்பனைக்கு வரவில்லை . வரும் காலத்தில் R3 ஏபிஎஸ் மாடல் வரலாம்.

இரட்டை முகப்புவிளக்குகளுடன் யமஹா ஆர்3 பக்கவாட்டில் முழுதும் அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியான தோற்றத்தினை பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகள் , தனிதனியான இருக்கைகள் , அனலாக் டிஜிட்டல் கிளஸ்ட்ர் ,கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்  போன்றவை பெற்றுள்ளது.

முன் பக்கத்தில் 110/70 மற்றும் 140/70 எம்ஆர்எஃப் ஜேப்பர் டயர்களுடன் என இரண்டிலும் 17 இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யமஹா ஆர்3 பைக்கின் மொத்த எடை 169கிலோ ஆகும் . இதில் 14 லிட்டர் எரிபொருள் கலனை பெற்றுள்ளது.

ரேசிங் நீலம் மற்றும் கருப்பு லைட்டனிங் என இரண்டு விதமான வண்ணங்களில் யமஹா R3 பைக் கிடைக்கும்.

என்ஜின்

யமஹா ஆர்3 பைக்கில் 42பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 29.6என்எம் ஆகும். 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து பாகங்களை தருவித்து இந்தியாவில் ஒருங்கினைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

கவாஸாகி நின்ஜா 300 , ஹோண்டா சிபிஆர் 250ஆர்  மற்றும் கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்க்கு போட்டியாக யமஹா YZF-R3 விளங்கும்.

யமஹா R3 பைக் விலை

யமஹா R3 பைக் விலை ரூ.3.25 லட்சம் (ex-showroom Delhi)

Yamaha YZF-R3 launched in India