Automobile Tamilan

2017 யூஎம் ரெனிகேட் கமாண்டோ , ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்

பி.எஸ் 4 தர எஞ்சினை பெற்ற யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரெனிகேட் கமாண்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. FI ஆப்ஷனை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யூஎம் ரெனிகேட் வரிசை

இரு மாடல்களிலும் கமாண்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட் இரு பைக்குகளிலும் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம் இதோ..!

24.8hp ஆற்றலுடன்,  21.8Nm டார்கினை வெளிப்படுத்தும்  279.5 சிசி எஞ்சினை பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் , பின்புறத்தில் இரட்டை சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பினை கொண்டுள்ளது.

க்ரூஸர ரக மாடலாக விற்பனை ரெனிகேட் கமாண்டோ செய்யப்படுகின்ற நிலையில் கூடுதல் ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்ற மாடலாக ஸ்போர்ட் எஸ் விளங்குகின்றது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு மாடலான ரெனிகேட் கிளாசிக் அடுத்த சில மாதங்களில் வரவுள்ளது.

  1.  ரெனிகேட் கமாண்டோ – ரூ.1.74 லட்சம்
  2.  ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ. 1.68 லட்சம்

Exit mobile version