ராயல் என்ஃபீல்டு கஃபே ரேசர் பைக் – சில விபரங்கள்

0
நம்ம கம்பீரத்திற்க்கு கம்பீரம் தரும் பைக்களில் ராயல் என்பீல்டு தனி முத்திரையுடன் விளங்குவதனை அறிவோம். ராயல் என்பீல்டு 500cc தன்டர்பேர்டு சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு 2013 மத்தியில் கஃபே ரேசர் பைக்கினை அறிமுகம் செய்ய உள்ளது.
வருகிற டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் லாங் பீச்சில் நடக்கவிருக்கும் மோட்டார்சைக்கிள் ஸோவில் பார்வைக்கு வைக்க உள்ளது. 2012 டில்லி ஆட்டோ  ஸோவில் ப்ரோட்டோடைப்பினை பார்வைக்கு வைத்தது குறிப்பிடத்தக்கது.

madras legend

புதிய கஃபே ரேசர் பைக் எடை குறைவாகவும் விரைவாகவும் பயணம் செய்யும் வகையில் இருக்கும் என என்பீல்டு உறுதியளித்துள்ளது. பாரம்பரிய தோற்றத்தை நிச்சியமாக நினைவுப்படுத்தும். அமெரிக்காவில் உள்ள ராயல் என்பீல்டு டீலர்கள் சுருக்கமாக என்பீல்டு பைக்கினை “மெட்ராஸ் லேஜன்ட்ஸ்” என குறிப்பிடுவார்களாம்.

553CC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. UCE எரிபொருள் தெளிப்பான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 25hp குதிரை திறன் டார்க் 38NM ஆகும்.

எலெக்ட்ரிக் ஸ்டார்ட்ர் பொருத்தப்பட்டள்ளது. மேலும் முதன்முதலாக முன்புற மட்கார்டு ப்ளாஸ்டிக்கியில் பொருத்தியுள்ளனர். ஆலாய் வீலும் கிடைக்கலாம்.

விலை 1.75 முதல் 2 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.