ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ் பைக்குகள் வருகை விபரம்..!

0

சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக கிளாசிக் 500 மற்றும் கான்டினென்ட்டில் ஜிடி அடிப்படையில் விற்பனை செய்ய உள்ளது.

Custom Continental GT by TNT Motorcycles

Google News

ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ்

உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு கஸ்டமைஸ் எனப்படும் மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை விரைவில் தனது ஷோரூம்களில் விற்பனை செய்ய உள்ளது.

Custom Continental GT by TNT Motorcycles

இதற்காக இந்தியாவின் முன்னணி கஸ்டமைஸ் நிறுவனங்களான இன்லைன் த்ரீ, டிஎன்டி மோட்டார் சைக்கிள்ஸ், புல் சிட்டி கஸ்டம்ஸ் மற்றும் பாம்பே கஸ்டம் வோர்க்ஸ் போன்ற மாற்றியமைக்கும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணி வாயிலாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான கஸ்டமைஸ் ஆப்ஷன் மற்றும் ரைடிங் கியர்ஸ் எனப்படும் ஆடைகள் உள்பட ஹெல்மெட் போன்றவற்றை தயாரித்து ஆன்லைன் மற்றும் தனது ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்ய உள்ளது.

Custom Classic 500 by Inline 3 Motorcycles

கார்கோ பேன்ட்ஸ,ரைடிங்கியர் ஆக்செரீஸ்களான க்ளோவ்ஸ், பெல்ட்ஸ், ஹெல்மெட், பூட்ஸ், பேட்ஜ்ஸ் போன்றவை ஆன்லைன்தளங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் மின்த்ரா போன்றவற்றிலும் ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களிலும் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Custom Chrome 500 by Bull City Customs