ராயல் என்பில்டு கிளாசிக் 500 சிறப்பு பதிப்பு

ராயல் என்ஃபில்டு கிளாசிக் 500 பைக்கின் சிறப்பு வரையறுக்கப்பட்ட பைக்கினை ராயல் என்ஃபில்டு அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்ஃபில்டு கிளாசிக் 500 புல்லட்

இந்த வரையறுக்கப்பட்ட சிறப்பு பதிப்பில் மொத்தம் 3 விதமான வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை டெசர்ட் ஸ்ட்ரோம், ஸ்குவாட்ரான் புளூ மற்றும் பேட்டில் க்ரீன் ஆகும்.

ஒவ்வொரு வண்ணத்திலும் தலா 200 பைக்குகள் கிடைக்கும். பேட்டில் கீரீன் வண்ண பைக் மட்டும் வெளிநாடுகளுக்கு மற்ற இரண்டு வண்ணங்களும் இந்தியாவிற்க்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் என்ஜின் கருப்பு வண்ணத்தில் இருக்கும். வாடிக்கையாளரின் விருப்பத்தின் பெயரில் தங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

ராயல் என்ஃபில்டு கிளாசிக் 500 புல்லட்

உலகப்போரில் முக்கிய ரகசிய தகவல்களை பரிமாறும் வீரர்கள் மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி எதிரி நாட்டு ரானுவத்தின் கண்களில் சிக்காமல் தங்கள் நாட்டுக்கு ரகசிய செய்திகளை கொண்டு செல்வர். அவர்களை டெஸ்பேட்ச் ரைடர்கள் என அழைப்பர். அவர்களை நினைவுப்படுத்தும் வகையில் இந்த பதிப்பினை அறிமுகம் செய்துள்ளனர்.

வரும் ஜூலை 15ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கின்றது. விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட உள்ளது.
முன்பதிவு முகவரி ; http://store.royalenfield.com/

ராயல் என்ஃபில்டு கிளாசிக் 500 புல்லட்

Royal Enfield classic 500 bike gets limited edition.