ரீகல் ராப்டார் மோட்டார்சைக்கிள் இந்தியா வருகை

அமெரிக்காவின் ரீகல் ராப்டார் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் மூன்று பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் ஃபேப்லஸ் அன்ட் பியான்ட் நிறுவனத்துடன் இணைந்து சிகேடி முறையில்  ரீகல் ராப்டார்விற்பனைக்கு வந்துள்ளது.

ரீகல் ராப்டார்  பாப்ர் 350 , க்ரூஸர் 350 மற்றும் டேடோனா 350 என மூன்று பைக்குகளை அறிமுகம் செய்துள்ளனர்.
 மூன்று பைக்குகளிலுமே 22.8பிஎச்பி ஆற்றலை தரவல்ல 320சிசி வாட்டர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 22என்எம் ஆகும். 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரீகல் ராப்டார் க்ரூஸர் 350
ரீகல் ராப்டார் க்ரூஸர் 350

ரீகல் ராப்டார் க்ரூஸர் 350

ரீகல் ராப்டார் க்ரூஸர் 350 பைக் என்ட்ரி லெவல் க்ரூஸர் பைக்காக திகழ்கின்றது. கருப்பு மற்றும் சில்வர் பூச்சூகளை கொண்டுள்ளது. முன்புறத்தில் 18 இஞ்ச் வீலும் பின்புறத்தில் 15 இஞ்ச வீலும் பொருத்தியுள்ளனர். இரண்டு வீலும் 15 ஸ்போக்குகளை கொண்டுள்ளது.

14 லிட்டர் பெட்ரோல் கலன் கொண்டுள்ளது. முன்புறத்தில் 300மமீ டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் 240மமீ டிஸ்க்கும் கொண்டுள்ளது. ரீகல் ராப்டார்  க்ரூஸர் 350 பைக்கின் மொத்த எடை 180கிலோ ஆகும்.

ரீகல் ராப்டார் டேடோனா 350

ரீகல் ராப்டார் டேடோனா 350 பைக் நவீன அம்சங்களை பெற்ற மோட்டார்சைக்கிள் ஆகும்.  பல இடங்களில் குரோம் பூச்சு பெற்றுள்ளது. கைப்பிடிகள் மற்றும் வீல் போன்றவை கருப்பு வண்ணத்தில் உள்ளது.

15 லிட்டர் பெட்ரோல் கலன் கொண்டுள்ளது. முன்புறத்தில் 300மமீ டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் 240மமீ டிஸ்க்கும் கொண்டுள்ளது. ரீகல் ராப்டார்  டேடோனா 350 பைக்கின் மொத்த எடை 180கிலோ ஆகும்.

ரீகல் ராப்டார் டேடோனா 350
ரீகல் ராப்டார் டேடோனா 350

ரீகல் ராப்டார் பாப்ர் 350

பாப்ர் 350 பைக் மிக கம்பிரமான தோற்றத்தில் பில்லோவ் இருக்கைக்கு பதிலாக சாதரன இருக்கையை கொண்டுள்ளது. முன்புறத்தில் 18 ஸ்போக்குகளை கொண்ட 21இஞ்ச் வீலும் பின்புறத்தில் 15 இஞ்ச வீலும் பொருத்தியுள்ளனர்.

14 லிட்டர் பெட்ரோல் கலன் கொண்டுள்ளது. முன்புறத்தில் 300மமீ டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் 240மமீ டிஸ்க்கும் கொண்டுள்ளது. ரீகல் ராப்டார்  பாப்ர் 350 பைக்கின் மொத்த எடை 165கிலோ ஆகும்.

ரீகல் ராப்டார் பாப்ர் 350
ரீகல் ராப்டார் பாப்ர் 350

ரீகல் ராப்டார் மோட்டார்சைக்கிள் விலை விபரம் (ex-showroom, Hyderabad)

ரீகல் ராப்டார் க்ரூஸர் 350 – ரூ. 2.96 லட்சம்

ரீகல் ராப்டார் டேடோனா 350  – ரூ 3.22 லட்சம்

ரீகல் ராப்டார் பாப்ர் 350 – ரூ333 லட்சம்

இன்று ஹைத்ராபாத்தில் ரீகல் ராப்டார் மோட்டார்சைக்கிள் திறப்பு விழா நடைபெற உள்ளது. முன்பதிவும் இன்று தொடங்குகின்றது.

Regal Raptor cruiser motorcycle launched in india