லோகியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

இந்தியாவின் லோகியா ஆட்டோ நிறுவனத்தின் ரூ.40,850 விலையில் லோகியா ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மாசு உமிழ்வு  இல்லாத ஓமா ஸ்டார் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை .

Lohia-Oma-Star

Google News

மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்க வல்ல ஓமா ஸ்டார் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 முதல் 8 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 60 கிமீ வரை பயணிக்கலாம். 250W பிர்ஷ்லஸ் டிசி மோட்டார் வாயிலாக ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்துகின்றது.

இரு நபர்கள் அம்ர்ந்து செல்லும் வகையிலான ஓமா ஸ்டார் ஸ்கூட்டர் எவ்விதமான ஓட்டுநர் உரிமமும் இல்லாமல் பொது சாலையில் இயக்க முடியும்.  எவ்விதமான பராமரிப்பு இல்லாத பேட்டரியுடன் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள்  , அலாய் வீல், டிஸ்க் பிரேக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது. சிவப்பு , கருப்பு , கிரே மற்றும் வெள்ளை என நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ஓமா ஸ்டார் விலை ரூ.40,850 (ஆன்ரோடு விலை டெல்லி )