Automobile Tamilan

ஹீரோ டூயட் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹீரோ டூயட் ஸ்கூட்டர் மெட்டல் பாடியுடன் அறிமுகம் செயப்பட்டுள்ளது. ஹீரோ டூயட் ஸ்கூட்டர்  தனது போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ளது.
ஹீரோ டூயட் ஸ்கூட்டர்
ஹீரோ டூயட் ஸ்கூட்டர் 

டூயட் ஸ்கூட்டரில் 110.9சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்குவிசை 8.30என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 63.8கிமீ ஆகும்.

மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை போல அல்லாமல் மெட்டல் பாடியுடன் டூயரட் வந்துள்ளதால் 6கிலோ வரை எடை கூடுதலாக உள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் சாக் அப்சார்பர்களை பெற இயலும். டீயூப்லஸ் டயர் மற்றும் இன்கிரேட்டடு பிரேக்கிங் அமைப்பினை நிரந்தர அம்சமாக பெற இயலும். டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் சர்வீஸ் ரிமைன்டரை பெற இயலும்.

ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் இரண்டு விதமான வேரியண்ட்களில் பல விதமான நவீன வசதிகளான மொபைல் சார்ஜிங் போர்ட் , இருக்கை அடியில் உள்ள லக்கேஜ்க்கான விளக்கு , பின்புற லக்கேஜ் ஹூக் போன்றவை டாப் VX வேரியண்டில் நிரந்தர அம்சமாக உள்ளது. LX பேஸ் வேரியண்டில் துனைகருவிகளாக பெற்று கொள்ளலாம்.

சிவப்பு , வெள்ளை ,  மேட் கிரே ,கருப்பு , பச்சை மற்றும் கிரேஸ் கிரே என மொத்தம் 7 விதமான வண்ணங்களில் கிடைக்கும். ஹீரோ டூயட் ஸ்கூட்டர்  விலை விபரங்கள் இன்னும் சில வாரங்களில் வரவுள்ளது.

Hero Duet scooter unveiled in India

Exit mobile version