Automobile Tamil

ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் விலை குறைந்தது – ஜிஎஸ்டி எதிரொலி

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தங்களுடைய ஜிஎஸ்டி வரிக்கு பிறகு ஹீரோ ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ. 400 முதல் ரூ. 1800 விலை குறைத்துள்ளது. ஹீரோ பிரிமியம் மாடல் விலை ரூ.4000 வரை குறைந்துள்ளது.

ஹீரோ பைக் விலை – ஜிஎஸ்டி

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விலை சராசரியாக 400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பபாக உயர் ரக மாடலான ஹீரோ க்ரிஷ்மா 4000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி-க்கு பிறகு விலை குறைப்பு மாநிலம் வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானா உள்பட ஒரு சில மாநிங்களில் விலை குறைப்பு மிக குறைவாகவே இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹீரோ பைக் நிறுவனம் ரூ.40,000 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான விலையில் 13 பைக்குகள் மற்றும் 3 ஸ்கூட்டர்கள் என மொத்தம் 16 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. முழுமையான விலை பட்டியல் விபரம் மாடல் வாரியாக விரைவில் வெளிவரும் இணைந்திருங்கள்..

வரும் செப்டம்பர் மாதம் இரண்டு புதிய பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப்  அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வரலாம்.

Exit mobile version