ஹோண்டா ஆக்டிவா 4ஜி மேட் கிரே எடிசன் அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனமாக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா 4ஜி மாடலில் தற்போது புதிதாக மேட் கிரே நிறத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 4ஜி

ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில் இதுவரை மேட் சில்வர் மெட்டாலிக் , மேட் கிரே மெட்டாலிக், நீலம் மெட்டாலிக், சிவப்பு மெட்டாலிக், கருப்பு, வெள்ளை மற்றும் பிரவுன் மெட்டாலிக் போன்ற 7 வண்ணங்களுடன் ஆக்டிவா ஸ்கூட்டர் கிடைத்து வரும் நிலையில் மொத்தம் 7 நிறங்களில் கிடைத்து வந்த மாடலில் கூடுதலாக மேட் கிரே இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு வசதிகள் மற்றும் தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் கொடிகட்டி பறக்கின்றது. ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் சந்தையில் 58 சதவீத பங்களிப்பினை ஆக்டிவா கொண்டுள்ள நிலையில்  109சிசி ஹோண்டா இகோ டெக்னாலாஜி (Honda Eco Technology – HET) இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 9 Nm ஆகும். காம்பி பிரேக் சிஸ்டத்துடன் இணைந்துள்ள ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விளங்குகின்றது.

தமிழகத்தில் ஹோண்டா ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் விலை ரூ. 53,213 எக்ஸ்-ஷோரூம் சென்னை விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Recommended For You