Automobile Tamilan

யமஹா ஆர்15 பைக்கில் தானியங்கி முகப்பு விளக்கு வசதி அறிமுகம்

வருகின்ற ஏப்ரல் 2017 முதல் நிரந்தர அம்சமாக பைக்குகளில் இடம்பெற உள்ள தானியங்கி முகப்பு விளக்கு வசதியை யமஹா ஆர்15 பைக் பெற்றுள்ளது. விலையில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் கிடைக்க தொடங்கியுள்ளது.

yamaha-r15-s

உயர்தர பைக் தயாரிப்பாளர்களான ஹார்லி-டேவிட்சன் , கவாஸாகி , கேடிஎம் நிறுவன பைக்குகளில் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஹெட்லேம்ப வசதியை தொடக்கநிலை மாடல்களில் ஹீரோ மோட்டோகார்ப் ஸ்பிளென்ட்ர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் முதன்முறையாக அறிமுகம் செய்தது.

தானியங்கி முறையில் வெளிச்சம் குறைவான நேரங்களில் தானியங்கி வகையில் ஒளிரும் ஆட்டோ ஹெட்லேம்ப் வசதியானது மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக கருதப்பட்டுகின்றது. ஆட்டோ ஹேட்லம்ப் பெற்ற பைக்குகளில் ஹெட்லைட் சுவிட்ச் இருக்காது. ஒருசில தயாரிப்பாளர்கள் ஆட்டோஹெட்லேம்ப் ஆன்/ஆஃப் சுவிட்ச் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

வாகன ஓட்டிக்கு சாலை தெளிவாக தெரியும் வகையில் அமைந்துள்ள ஆட்டோ ஹேட்லேம்ப் வாயிலாக விபத்துகள் குறையும். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் அனைத்து மாடல்களிலும் விரைவில் ஆட்டோ ஹெட்லேம்ப் முறையை அறிமுகப்படுத்த உள்ளனர்.

Exit mobile version