யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது

0

ரூ.46,400 விலையில் யமஹா சல்யூடோ RX பைக் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. RX பிராண்டின் பெயரை யமஹா மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

yamaha-saluto-RX-launched

Google News

2005 ஆம் ஆண்டில் ஆர்எக்ஸ் பிராண்டினை ஒரங்கட்டினாலும் ஆர்எக்ஸ்100 , ஆர்எக்ஸ்135 போன்ற பைக் மாடலுக்கு இன்று லட்சங்களில் வாங்க பலர் காத்திருக்கின்றனர். மிகவும் பிரபலமான ஆர்எக்ஸ் பிராண்டின் பெயரை சமீபத்தில் விற்பனைக்கு வந்து வெற்றி பெற்ற சல்யூடோ 125 பைக்குடன் இணைத்து புதிய யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் என்ற பெயரில் 110சிசி தொடக்க நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.5 Nm ஆகும். இதில் 4வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினாகும்.

யமஹா நிறுவனத்தின் அதிக மைலேஜ் தரவல்ல பூளூ கோர் நவீன தொழில்நுட்பத்தினை பெற்றுள்ள சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் மைலேஜ் லிட்டருக்கு 84 கிமீ ஆகும்.

சல்யூடோ பைக்கின் தாத்பரியங்களை கொண்ட மினி மாடலாக விளங்கும் ஆர்எக்ஸ் பைக்கில் 10 ஸ்போக்குகளை கொண்டுள்ளது. சிவப்பு , நீளம் , மேட் கருப்பு மற்றும் கருப்பு என  4 வண்ணங்களை கொண்டுள்ளது.

யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் மிக இலகுவான எடை மற்றும் வலுமிக்க ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெறும் 98 கிலோ எடை மட்டுமே பெற்றுள்ளது.

யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் பைக் விலை ரூ.46,400 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

yamaha-saluto-RX-red-color

yamaha-saluto-RX-blue

yamaha-saluto-RX-black