2016 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

மேம்படுத்தப்பட்ட 2016 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர்  ரூ. 64574 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வடிவம் , மேம்படுத்தப்பட்ட என்ஜின் மற்றும் கூடுதல் மைலேஜ் பெற்றுள்ளது.

new-suzuki-access-125

Google News

சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள புதுப்பிக்கப்பட்ட 8.7 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 124சிசி என்ஜினை பெற்றுள்ளது. இதன் இழுவைதிறன் 10.2 Nm ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 64 கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ஸ்விங் ஆர்மினை பெற்றுள்ளது. முன்பக்கம் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷன் பின்புறத்தில்  டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. 125சிசி ஸ்கூட்டரில் அதிக எடையுள்ள ஸ்கூட்டராக இருந்து வந்த ஆக்செஸ் 125 தற்பொழுது 10 கிலோ வரை எடை குறைந்து 102 கிலோவாக குறைந்துள்ளது. மேலும் முந்தைய 6.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் தற்பொழுது 5.6 லிட்டராக மாறியுள்ளது.

இருக்கையின் அடியில் உள்ள ஸ்டோரேஜ் 21 லிட்டர் கொள்ளவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அலாய் வில் மற்றும் டிஸ்க் பிரேக் மாடல் ஆப்ஷனலாக கிடைக்கும். ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் நீலம் , வெள்ளை , கருப்பு , கிரே மற்றும் சிவப்பு என 5 வண்ணங்களில் வந்துள்ளது.

2016 சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர்  ரூ. 64574 ( ஆன்ரோடு சென்னை விலை )

[envira-gallery id=”7105″]