2017 கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடலாக இரு கேடிஎம் ஆர்சி பைக்குகளும் வந்துள்ளது.

ஃபுல் ஃபேரிங் மாடல்களான இரு பைக்குகளும் சிறிய அளவிலான ஸ்டைல் மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளை பெற்று வந்துள்ளது.  மேலும் அடுத்த சில நாட்களிலே நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 கேடிஎம் RC 200

புதிய கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் நேர்த்தியான புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சினில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. முன்பக்க டயரின் பிரேக் 20மிமீ அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 300மிமீ அகலத்தை பெற்றுள்ளது.

25 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2017 கேடிஎம் RC 390

மிக நேர்த்தியான புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் கேடிஎம் லோகோ போன்றவற்றுடன் முன்பக்க டயரின் பிரேக் 20மிமீ அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 320மிமீ அகலத்துடனும் , ரைட் பை வயர் திராட்டிள் நுட்பம் , சிலிப்பர் கிளட்ச் மற்றும் TFT தொடுதிரை அமைப்புகொண்ட ஸ்மார்ட்போன் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

43.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 199சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 36 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2017 கேடிஎம் RC பைக்குகள் விலை பட்டியல்

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

Exit mobile version