சர்வதேச தரத்தில் புதிய ஹீரோ கிளாமர் பைக் அறிமுகம்

உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் அர்ஜென்டினா சந்தையில் நுழைந்துள்ளதை முன்னிட்டு 2017 ஹீரோ கிளாமர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் தங்களுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வரும் ஹீரோ மோட்டோகார்ப் 2020 ஆம் ஆண்டிற்குள் 50க்குமேற்பட்ட நாடுகளில் செயல்படும் வகையிலான திட்டத்தின் அங்கமாக 35வது சர்வதேச சந்தையாக அர்ஜென்டினாவில் களமிறங்கியுள்ளது.மேலும்  முதன்முறையாக டாக்கர் ரேலி 2017 பந்தயங்களில் கலந்து கொண்டுள்ள நிலையில் சிறப்பான செயல்திறனை பந்தயங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.

புதிய கிளாமர் பைக்

இக்னைடர் என்ற பெயரில் லத்தின் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலை ஹீரோ கிளாமர் என்ற பெயரில் அர்ஜென்டினா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிய கிளாமர் பைக் வழக்கம் போல கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ எஞ்சின் ஆப்ஷன்களில் எல்இடி ஹெட்லேம்ப் ,  தானியங்கி ஹெட்லேம்ப் ஆன் வசதி (AHO) மற்றும் டார்க் ஆன் டிமான்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஹீரோ கிளாமர் 125சிசி கார்புரேடர் மற்றும் எஃப்ஐ எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் 11.4 bhp (8.5 kW) @ 7500 rpm பவரும் , 11 Nm @ 6500 rpm டார்க்கையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலை விட புதிய என்ஜினில் 27 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 6 சதவீத கூடுதல் டார்க் வெளிப்படுத்தும். இதுதவிர  எரிபொருள் சிக்கனம் கார்புரேட்டர் மாடலில் 3 சதவீதமும்  எஃப்ஐ மாடலில் 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளில் ஐஸ்மார்ட் எனப்படும் ஐ3எஸ் ,  எல்இடி ஹெட்லேம்ப் ,  தானியங்கி ஹெட்லேம்ப் ஆன் வசதி (AHO) மற்றும் டார்க் ஆன் டிமான்ட் போன்றவற்றை பெற்றுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடனும் கிடைக்க உள்ளது.

ஹீரோ அர்ஜென்டினா

35வது சர்வதேச சந்தையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள அர்ஜென்டினாலில் ஹீரோ நிறுனம் முதற்கட்டமாக மார்வன் SA நிறுவனத்தை விநோயகஸ்தராக நியமித்துள்ள ஹீரோ அதன் தொழிற்சாலையில் வருடத்திற்கு 5000 பைக்குகளை தயாரிக்க உள்ளது.

அடுத்த சில வருடங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆண்டிற்கு 50,000 முதல் 70,000 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யவும் ஹீரோ திட்டமிட்டுள்ளது. ஹீரோ கிளாமர் தவிர அர்ஜென்டினாலில் ஹங்க் , ஹங்க் ஸ்போர்ட்ஸ் , இக்னைடர் மற்றும் ஹீரோ டேஸ் (மேஸ்ட்ரோ எட்ஜ்) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அர்ஜென்டினா சந்தைக்கான விளம்பர தூதுவராக Diego Pablo Simeone பிரபலமான கால்பந்து வீரரை நியமித்துள்ளது.

இந்தியாவில் புதிய ஹீரோ கிளாமர் பைக் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version