2017 ஹோண்டா ஆக்டிவா-i விற்பனைக்கு வந்தது

0

பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சினை பெற்ற 2017 ஹோண்டா ஆக்டிவா-i ஸ்கூட்டரில் ஏஹெச்ஓ  மற்றும் டூயல் டோன் எனப்படும் இரு வண்ண கலவையிலான நிறத்துடன் ரூ. 50,868 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Honda Activa i BSIV magenta 1

2017 ஹோண்டா ஆக்டிவா-i

  • ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே இஞ்சினை ஆக்டிவா ஐ பெற்றுள்ளது.
  • ஏஹெச்ஒ உள்பட இருவண்ண கலவை நிறங்களை பெற்றுள்ளது.
  • 5 விதமான நிறங்களில் ஆக்டிவா ஐ கிடைக்கும்.

Honda Activa i BSIV black

ஆக்டிவா ஐ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.19சிசி எஞ்சின் 7,000 rpm சுழற்சியில் 8 bhp பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்துவதுடன் 5,500 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 8.94 Nm டார்க்கினை வழங்கவல்லதாகும். விமேட்டிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர், காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய ஈக்வலைஸர், 18 லிட்டர் இருக்கை அடியில் ஸ்டோரேஜ் வசதி உள்பட மொபைல் சார்ஜிங் சாக்கெட் போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது.

இருபக்க டயர்களில் 130மிமீ டிரம் பிரேக்கை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் எடை 103 கிலோ ஆகும். பர்பிள் மெட்டாலிக் ,லஷ் மெகன்டா , ஆரஞ்சு , சிவப்பு மற்றும் கருப்பு என 5 விதமான நிறங்களில் கிடைக்கும்.

Honda Activa i BSIV orange

2017 ஹோண்டா ஆக்டிவா-i விலை ரூ.  50,868 சென்னை எக்ஸ்ஷோரூம்.

Honda Activa i BSIV magenta 1 Honda Activa i BSIV red Honda Activa i BSIV purple