2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160R விற்பனைக்கு வெளிவந்தது

0

150சிசி சந்தையில் மிக சிறப்பான மாடலாக விளங்குகின்ற 2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160 ஆர் பைக் ரூ.83,490 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹார்னெட் 160R பைக்கில் பவர் குறைக்கப்பட்டு இரண்டு புதிய நிறங்களுடன், எடை 2 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது.

2017 Honda CB Hornet 160R

Google News

2017 ஹோண்டா சிபி ஹார்னெட் 160R

இந்தியாவின் முதல் பிஎஸ் 4 மாடாக அறிமுகம் செய்யப்பட்ட சிபி ஹார்னெட் 160R பைக்கில் சிவப்பு மற்றும் நீலம் என இரு நிறங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்களுடன் சேர்த்து 4 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.

புதிய நிறங்களை தவிர ஹார்னெட் 160ஆர் பைக் எடை சாதரன மாடல் 140 கிலோ எடையிலிருந்து 138 கிலோ எடையாக குறைக்கப்பட்டு, சிபிஎஸ் வேரியன்ட் மாடல் 142 கிலோ எடையிலிருந்து 140 கிலோ எடையாக குறைக்கப்பட்டுள்ளது.

2017 Honda CB Hornet 160R blue

சிபி யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே என்ஜினை சிபி ஹார்னெட் 160ஆர் பைக் பெற்றிருந்தாலும் முந்தைய மாடல் ஆற்றல் 15.7 பிஹெச்பி இருந்த நிலையில் தற்பொழுது 0.62 bhp குறைக்கப்படு 15.04 பிஹெச்பி பவருடன், டார்க் 14.76 என்எம் வழங்குகின்றது.. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.

CB Hornet 160R Specifications

என்ஜின் 162.71 சிசி
ஆற்றல்  15.04 பிஹெச்பி @ 8500 rpm
டார்க்  14.76 என்எம் @ 6500 rpm
கியர்பாக்ஸ்  5 வேகம் – 1-N-2-3-4-5
மைலேஜ்  58.95 Kmpl (ARAI)
டாப் ஸ்பீடு 110கிமீ
 நீxஅxஉ 2041X783X1067 மிமீ
டேங்க்  12 லிட்டர்
வீல்பேஸ்  1345மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ்  164மிமீ
முன் டயர்  100/80-17
பின் டயர் 140/70-17
முன் பிரேக்  டிஸ்க் 276மிமீ
பின் பிரேக்  டிரம் 130 மிமீ / டிஸ்க் 220மிமீ
முன் சஸ்பென்ஷன்  டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன்   மோனோசாக்

போட்டியாளர்கள்

ஜிக்ஸெர் , பல்சர் 150 , ஹங்க் , யமஹா FZ  போன்ற மாடல்களுடன் போட்டியை ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் எதிர்கொள்ளுகின்றது.

honda cb Hornet 160r Striking Green special edition

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிரம் – ரூ.83,490

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிஸ்க் சிபிஎஸ் – ரூ.87,990

{அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம்  விலை விபரம் }

honda cb Hornet 160r mars orange special edition