2017 ஹோண்டா யூனிகார்ன் 160 விற்பனைக்கு வந்தது

0

மேம்படுத்தப்பட்ட புதிய பிஎஸ் 4 என்ஜின் மற்றும் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்ற புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் ரூ. 85,396 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. யூனிகார்ன் 160 பைக்கில் தானியங்கி முகப்பு விளக்கு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட யூனிகார்ன் 160 மாடல் அபரிதமான வரவேற்பினை பெற்று சந்தையிலிருந்த நிலையில் மீண்டும் வந்த யூனிகார்ன் 150 பைக் மற்றும் சிபி ஹார்னெட் 160ஆர் பைக்குளின் வரவினால் கடந்த சில மாதங்களாகவே தனது சொந்த மாடல்களினாலே மிக கடுமையான போட்டியை எதிர்கொள்வதனால் விற்பனையில் சரிவினை தொடர்ந்து சந்தித்து வரும் யூனிகார்ன் 160 பைக் நவம்பர் மாதம் 26 அலகுகளை மட்டுமே விற்பனை ஆகியுள்ள நிலையில் தற்பொழுது மேம்படுத்தப்பட்ட புதிய யுனிகார்ன் 160 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

Google News

புதிய யூனிகார்ன் 160

புதிய பைக்கின் தோற்ற அமைப்பில் நீட்டிக்கப்பட்ட புதிய வைசரை கொண்டுள்ளது.. மேலும் புதிய நீலம் வண்ணத்தை பெற்று முந்தைய வண்ணங்களான வெள்ளை , கிரே நிறங்களுடன் கருப்பு மற்றும் சிவப்பு நிற மாடல்களில் புதிய பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது.

ஹெச்இடி (Honda Eco Technology – HET) நுட்பத்துடன் வந்துள்ள 160சிசி பிஎஸ் 4 என்ஜின் பொருத்தப்பட்ட இந்த மாடலின் பவர் 13.82 பிஹெச்பி மற்றும் 13 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. புதிய யூனிகார்ன் 160 மைலேஜ் ஒரு லிட்டருக்கு 62கிமீ ஆகும்.

ஹெச் வடிவ எல்இடி டெயில் விளக்கை பெற்றுள்ள பைக்கின் முன்புறத்தில் டெலேஸ்கோபிக் ஃபோர்குகள் பின்புறத்தில் ஸ்பிரிங் லோடேட் மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. 240மிமீ டிஸ்க் பிரேக் முன்பக்க டயரிலும் ,130மிமீ டிரம் பிரேக்குடன் சிபிஎஸ் ஆப்ஷனை யூனிகார்ன் பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 விலை பட்டியல்

CB UNICORN 160 STD – ரூ. 84,563

CB UNICORN 160 CBS – ரூ. 87,289

CB UNICORN 160 STD (BS-IV) – ரூ. 85,396

CB UNICORN 160 CBS (BS-IV) –  ரூ. 88,122

(அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை)