Automobile Tamil

2017 சுஸூகி ஆக்செஸ் 125 விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சின் மற்றும் ஏஹெச்ஓ வசதியுடன் 2017 சுஸூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் மாடல் ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பான வசதிகளை கொண்ட மாடலாக ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விளங்குகின்றது.

2017 சுஸூகி ஆக்செஸ் 125

வருகின்ற ஏப்ரல் 1 முதல் அனைத்து பைக்குகளிலும் பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட வேண்டியா கட்டாயம் ஏற்ப்படுள்ளதால் அனைத்து வாகன தயாரிபாளர்களும் பிஎஸ் 4 சார்ந்த மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் சுசூகி நிறுவனத்தின் ஜிக்சர் பைக்குகளை தொடர்ந்து ஆக்செஸ் 125 மாடலிலும் பிஎஸ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

8.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.2என்எம் ஆகும். சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் புதிய பிஎஸ் 4 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக மெட்டாலிக் சில்வர் வண்ணமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ட்யூப்லெஸ் டயருடன் விற்பனை செய்யப்படுகின்ற இந்த ஸ்கூட்டரில் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களுடன் இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ் வசதி , டிசி சாகெட் போன்ற வசதிகளை கொண்டு விளங்குகின்றது.

2017 சுஸூகி ஆக்செஸ் விலை

( அனைத்தும் சென்னை ஆன்-ரோடு விலை பட்டியல் )

 

Exit mobile version