2017 பஜாஜ் பல்சர் NS 200 ABS பைக் விற்பனைக்கு வந்தது

மிக வேகமாக வளர்ந்து வரும் 150சிசி-க்கு  மேற்பட்ட சந்தையில் 200சிசி பிரிவில் இடம்பெற்றுள்ள பஜாஜ் பல்சர் NS 200 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் NS 200 ஏபிஎஸ்

முழுதும் அலங்கரிக்கப்பட்ட பல்சர் ஆர்எஸ் 200 பைக் மாடலின் நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும்  பல்சர் NS 200 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் கூடுதலாக இணைக்கப்பட்ட மாடலுக்கு நாடு டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

பல்சர் NS200 பைக்கில் 23.1 குதிரைசக்தி வெளிப்படுத்தும் 199.5 சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற சக்கரத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு உள்ள இந்த பைக்கில் முன்புற சக்கரத்துக்கு மட்டும் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள சாதாரண மாடலின் தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறாமல் வந்துள்ளது.

ஏபிஎஸ் அல்லாத டிஸ்க் பிரேக் பல்சர் என்எஸ் 200 மாடல் ரூ.12,616 வரை கூடுதலான விலையில் அமைந்துள்ள பல்சர் 200 என்எஸ் ஏபிஎஸ் விலை ரூ.1.08 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.

பஜாஜ் பல்சர் NS 200 படங்கள்

Recommended For You